பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா உட்பட தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


அதன்படி கவுரி லங்கேஷின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா கூறியுள்ளார். மேலும் கவுரி லங்கேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 


இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் நசுக்கப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 


பாஜகவுக்கு எதிராக செயல்படுவோர் மிரட்டப்படுவதோடு, கொல்லப்படுதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். கவுரி கொலைக்கு காரணமானவர்களை விரைந்து கண்டுபிடிக்க சித்தராமைய்யாவை வலியுறுத்தியுள்ளேன் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.