அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி இந்தியாவின் முதன்மையான மற்றும் பிரபலமான தொழிலதிபராக உள்ளார். 2022 M3M Hurun Global Rich List வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் 6,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் அதானி. இதன்மூலம் கடந்த ஆண்டில் உலகிலேயே அதிக செல்வத்தை சம்பாதித்த நபராகவும் அவர் உள்ளார். கடந்த ஆண்டில் $49 பில்லியன் அமெரிக்கன் டாலர் சம்பாதித்துள்ளார். தற்போது, 81 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 12வது பணக்காரராக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Adani: ஏறு முகத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு..!


சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த ஓராண்டில் அவரது வருமானம் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது 153 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், அவரது நிகர மதிப்பு 1,830 சதவீதம் வளர்ந்ததுள்ளது. இதனால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 313-வது இடத்தில் இருந்த அவர், கிடுகிடுவென உயர்ந்து 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


M3M India -வின் இயக்குனர் பங்கஜ் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவாரஸ்யமாக, நாட்டின் பில்லியனர்களில் 59% தாங்களாக வளர்ந்தவர்களாக இருக்கிறார்பகள். அதாவது புதிய தலைமுறை தொழில்முனைவோர்களாக இருக்கின்றனர். நிதி ரீதியாகவும், சொத்துக்கள் மற்றும் முதலீட்டில் துடிப்பானவர்களாகவும் அவர்கள் உள்ளனர். மேலும், பாலின உள்ளடக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மதிப்பீட்டில் தொழில்துறையில் ஆண்களை விட பெண்கள் முன்னிலையில் உள்ளனர்" எனக் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | Zee Digital: மூன்றாண்டுகளில் ஜீ டிஜிட்டலில் 1 பில்லியன் பயனர்கள்! டாக்டர் சுபாஷ் சந்திராவின் கனவு!


2021 ஆம் ஆண்டில் அதானி நிறுவனங்கள் வெளியிட்ட பங்குச்சந்தை பட்டியலுக்குப் பிறகு அவரின் செல்வம் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. உலகின் முதல் மூன்று பில்லியனர்களான எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை விடவும் அவரது செல்வத்தின் வளர்ச்சி வேகமாக உள்ளது.


அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலில், கவுதம் அதானிக்கு அடுத்தபடியாக கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜ் உள்ளார். மற்றொரு கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இருவரும் 2021-ல் $39 பில்லியன் தங்கள் நிகர மதிப்பில் சேர்த்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, 2021ல் $20 பில்லியன் சம்பாதித்து, ஆசியாவின் பணக்காரர் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டார். உலகின் பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார். டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே இந்தியர் அவர் மட்டுமே. 


மேலும் படிக்க | GPay, PhonePe-வை காலி செய்ய திட்டம்போடும் TATA - விரைவில் புதிய UPI செயலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR