சர்வதேச அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயால் எழுதப்பட்ட ரெட் சமதி என்ற இந்தி நாவலின் மொழிபெயர்ப்பான  'டோம்ப் ஆஃப் சாண்ட்’ புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புக்கர் விருது பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமையை கீதாஞ்சலி பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

80 வயதான மூதாட்டி ஒருவர், தனது வளரிளம் பருவத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது  எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்வது போல் இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகை எழுத்தாளருக்கும், மொழி பெயர்ப்பாளருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.   இந்த ஆண்டு புக்கர் விருதை வழங்குவதற்காக 135 புத்தகங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த புத்தகங்கள் அனைத்திற்கும் தலா 2,500 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படும்


மேலும் படிக்க | பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம்


லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புக்கர் விருதை வென்ற கீதாஞ்சலி ஸ்ரீ, புக்கர் பற்றி தான் கனவிலும் நினைக்கவில்லை எனவும், இது பெரிய அங்கீகாரம் எனவும், இந்த விருதினால் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த புத்தகத்திற்குப் பிறகு இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளுக்கு வளமான மற்றும் செழிப்பான பாரம்பரியம் உள்ளதாகவும், இந்த மொழிகளில் உள்ள சில சிறந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்வதன் மூலம் உலக இலக்கியம் வளமடையும் எனவும் கீதாஞ்சலி ஸ்ரீ கூறினார்.


64 வயதான கீதாஞ்சலி ஸ்ரீ மணிப்பூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ரெட் சமதி, மை உட்பட 5 நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், செர்பியா மற்று கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புக்கர் விருது வென்றதைத் தொடர்ந்து, கீதாஞ்சலி ஸ்ரீக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



மேலும் படிக்க | மீனவ பெண் கொலை ; சம்பவ இடத்தில் கைதானவர்கள் காட்டிய தடையங்கள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR