பூமியை நாளை தாக்கும் சூரியப்புயல்...இணையசேவை பாதிக்கும் அபாயம்
சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்பப்புயல் காரணமாக நாளை தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வெப்பப்புயல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த புயல் நாளை பூமியைத் தாக்கும் எனவும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புயலினால் ஏற்படும் அலைகள் கிரகத்தின் வழியாகவோ, செயற்கைக்கோள் வழியாகவோ செல்லும் போது பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் கடந்த 28-ம் தேதி வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட காந்தப் புயல் நாளை பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் விநாடிக்கு 496-607 கிலோ மீட்டர் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | புதிதாய் மில்லியன் விண்வெளி பொருட்கள்! அதிசயமான அறிவியல் கண்டுப்பிடிப்புகள்
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் NOAA எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பும் இந்த புயல் தாக்குவதை உறுதி செய்துள்ளது. இந்த வெப்பப் புயலின் தாக்கத்தை 5 பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இதில் ஜி-1 என்பது மிகக்குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிப்பதாகும். பூமியை நாளை தாக்கவுள்ள புயல் ஜி-3 வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஜி.பி.எஸ். சேவையில் பாதிப்பு ஏற்படுவதோடு, விண்வெளியில் உள்ள செயற்கைகோள்கள் செயலிழக்கலான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலினால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக விமான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும், மின் வழிதடங்களில் திடீர் உயர் மின் அழுத்த மாறுபாடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR