காதல் திருமணம் செய்த மணமகனை நாயைப்போல் நடத்தி கொடுமை படுத்தும் பெண்வீட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசம்: காதல் திருமணம் செய்த மணமகனை தாக்கிய மணப்பெண்ணின் உறவினர்கள், அவரை நாயைப்போல பெல்ட்டால் கட்டி இழுத்து துன்புறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. காசியாபாத்தைச் சேர்ந்த இக்ராமுதீன் என்ற நபர் பெண் ஒருவரை அவரது உறவினர்கள் சம்மதமின்றி காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், இக்ராமுதீனை கடத்திச் சென்று மூர்க்கமாக தாக்கியுள்ளனர். நாயைக் கட்டிப்போடும் பெல்ட்டால் கட்டி இக்ராமுதீனை தர தரவென இழுத்துவந்த அக்கும்பல், நாயைப்போல குரைக்கச் சொல்லியும் துன்புறுத்தியுள்ளனர். 


கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இக்ராமுதீன் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. "எங்கள் நீதிமன்ற திருமணத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாததால் எனது மனைவியின் உறவினர்களால் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்கள் என்னைத் தாக்கி, 2019 மே மாதம் நடந்த சம்பவத்தின் வீடியோவை படம்பிடித்தனர்" என்று இக்ராமுதீன் கூறினார்.


திரு இக்ராமுதீன் தனது மனைவியின் தம்பி ஒரு கான்ஸ்டபிள் என்பதால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். "என் மனைவியின் சகோதரர் ஒரு போலீஸ்காரர் என்பதால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை". சதர் காவல் நிலையத்தில் ஒரு கான்ஸ்டபிள் பிரபாத்குமார் கூறினார்: "எங்களுக்கு ஒரு வீடியோ கிடைத்துள்ளது. கதையின் ஒவ்வொரு கோணத்தையும் விசாரிப்போம். FIR தாக்கல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது."