உலகமயமாக்கல் என்பது நமது வாழ்வாதார எதார்த்தம் - மோடி!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் பிரதமர் மோடி இரண்டாவது விமான நிலையம் (நவி மும்பை சர்வதேச விமான நிலையம்) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் பிரதமர் மோடி இரண்டாவது விமான நிலையம் (நவி மும்பை சர்வதேச விமான நிலையம்) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்!
மேலும் ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் ரூ. 4,719 கோடி மதிப்பிலான நான்காவது கொள்கலன் முனையத்தினையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உறையாற்றி அவர் தெரிவித்ததாவது...
உலகமயமாக்கல் என்பது நமது வாழ்வாதார எதார்த்தம், அதைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அவசியம் எனவும், அதற்கு உயர் தரமான உள்கட்டமைப்பு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீர்வழிகளின் அபிவிருத்தி மற்றும் விமான வழி அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகள் ஆகும். அதற்கான வேலைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த விமான சேவை அபிவிருத்தி திட்டமானது கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ளது. தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நவி மும்பை விமான நிலையம் சேவை திட்டம் போன்று பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. கட்டுமானத்திற்கு தேவையான இடம் தட்டுப்பாடு போன்று இதர பல காரணங்களாலும் இவ்வாறு தடைப்பட்டுள்ளது, ஆனால் விரைவில் அவை நிறைவேற்றப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பங்கேற்று பிரதமரை வரவேற்றனர். இந்த விழாவில் விமான போக்குவரத்து துறை மந்திரி கஜபதி ராஜு, சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.