How to Check PF Balance: 2022-23 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு வட்டி வரவு வைக்கும் செயல்முறை தொடங்கியது. இந்த வட்டி உங்கள் பிஎஃப் கணக்கில் வந்துள்ளதா இல்லையா என்பதை உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எந்த மாதத்தில் பிஎஃப் கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டுமா? இதில் நிறுவனத்தின் பங்களிப்பு என்ன? மொத்த பிஎஃப் டெபாசிட் தொகை எவ்வளவு? நிறுவனம் பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்துள்ளது? போன்ற விவரங்களை பல வழிகளில் தெரிந்துக்கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரும் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது பிஎஃப் கணக்கு டெபாசிட் மற்றும் வட்டி விவரங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் 2022-23 நிதியாண்டில் EPF மீதான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக மத்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் PF கணக்கில் உள்ள தொகையை எவ்வாறு தெரிந்துக்கொள்வது?


உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. PF தொகை வருமானத்தின் முக்கிய பகுதியாகும். ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நபர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. நாட்டில் சுமார் 7 கோடி EPF கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. டிஜிட்டல் மீடியம் மூலம் பிஎஃப் இருப்பு மற்றும் பிற தகவல்களை எளிதாகப் பெறலாம். EPFO போர்டல், உமாங் மொபைல் ஆப் அல்லது SMS சேவைகள் மூலம் உங்கள் EPF தொகையை குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.



மேலும் படிக்க - பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு!! வட்டியை கணக்கில் வரவு வைக்க தொடங்கியது அரசு, உடனே செக் பண்ணுங்க


உமாங் செயலி மூலம் பிஎஃப் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்


உங்கள் மொபைலில் உமாங் செயலியை (UMANG App) பதிவிறக்கம் செய்வது எளிதான விஷயம். அதன் பிறகு UAN இன் உதவியுடன் உள்நுழைக, அங்கு நீங்கள் PF தொடர்பான அனைத்து தகவல்களையும் நிமிடங்களில் பெறுவீர்கள். இதற்கு, உமாங் செயலியில் இருக்கும் EPFO ​​பிரிவுக்குச் செல்லவும். பணியாளர் மைய சேவை என்பதைக் கிளிக் செய்யவும். வியூ பாஸ்புக்கைத் தேர்ந்தெடுத்து, பாஸ்புக்கைப் பார்க்க தனிப்பட்ட அடையாள எண் (Universal Account Numbe)  மோளம் உள்நுழையவும். இதற்கு UAN-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.


எஸ்‌எம்‌எஸ் மூலம் பிஎஃப் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்


எஸ்எம்எஸ் மூலமாகவும் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம். இதற்கான எண்ணை EPFO ​​வெளியிட்டுள்ளது. இதற்கும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். நீங்கள் SMS அனுப்பியவுடன், உங்கள் PF பங்களிப்பு மற்றும் இருப்பு பற்றிய தகவலை EPFO ​​உங்களுக்கு அனுப்பும்.


எஸ்எம்எஸ் அனுப்பும் முறையும் மிகவும் எளிதானது. இதற்கு 'EPFOHO UAN' என்று எழுதி 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இந்த வசதி ஆங்கிலம், இந்தி, தமிழ், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய 10 மொழிகளில் கிடைக்கிறது.


மேலும் படிக்க - EPFO: சம்பளத்தில் கழிக்கப்படும் தொகை PF கணக்கிற்கு வரவில்லையா? காரணம் என்ன?


நீங்கள் ஆங்கிலத்தில் செய்தியை அனுப்ப விரும்பினால், நீங்கள் EPFOHO UAN ENG என்று எழுத வேண்டும். கடைசி மூன்று வார்த்தைகள் (ENG) மொழியைக் குறிக்கும். இந்த மூன்று வார்த்தைகளை நீங்கள் உள்ளிட்டால், ஆங்கிலத்தில் இருப்புத் தகவல் கிடைக்கும். தமிழ் (TAM) குறியீட்டை உள்ளிட்டால், தமிழில் தகவல் கிடைக்கும். UAN க்கு பதிலாக உங்கள் UAN எண்ணை உள்ளிட வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். UAN என்று எழுதினாலே போதும்.


EPFO இணையதளம் மூலம் பிஎஃப் விவரங்களை பெறலாம்


EPFO இணையதளம் மூலமும் நீங்கள் PF இருப்பைச் சரிபார்க்கலாம். உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் EPFO ​​பாஸ்புக் போர்ட்டலில் உள்நுழையவும். பிறகு 'Download/View Passbook' என்பதைக் கிளிக் செய்யவும். இந்த (https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login) லிங்கை கிளிக் செய்து UAN உதவியுடன் நேரடியாக உள்ளே செல்லலாம்.


EPFO விதிகளின்படி, UAN செயலில் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே தொலைபேசி அழைப்பு அல்லது செய்தி மூலம் தகவல் பெறப்படும். இதனுடன், உங்களின் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் பான் ஆகியவற்றுடன் உங்களின் UAN இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் கடைசி பங்களிப்பு மற்றும் கணக்கின் அனைத்து விவரங்களையும் நீங்கள் பெறலாம்.


மேலும் படிக்க - வேலையை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்யாவிட்டால் நஷ்டம்தான்: முழு செயல்முறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ