விமான பயணிகளுக்கு good news: 3 மாதங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படாது!!
உள்நாட்டு விமானங்களின் கட்டணத்தின் மீதிருந்த கட்டுப்பாடுகளின் காலம் நவம்பர் 24 அன்று காலாவதியாகிறது. ஆனால் அரசாங்கம் அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு விமான கட்டணம் (Airfare) அதிகரிக்கப்படாது. இந்த காலகட்டத்தில் விமான கட்டணங்களை அரசாங்கம் கட்டுக்குள் வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களின் கட்டணத்தின் மீதிருந்த கட்டுப்பாடுகளின் காலம் நவம்பர் 24 அன்று காலாவதியாகிறது. ஆனால் அரசாங்கம் அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட லாக்டௌனில் அரசாங்கம் உள்நாட்டு விமான சேவைகளை துவக்கியபோது, DGCA அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில் கட்டண வரம்பை நிர்ணயித்திருந்தது.
லாக்டௌனின் போது, மே 25 அன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில், உள்நாட்டு பயணிகள் விமானங்களை மத்திய அரசு அனுமதித்தது. அதே நேரத்தில், இந்த விமானங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பையும் அரசாங்கம் நிர்ணயித்திருந்தது. இதனால் விமான நிறுவனங்கள் மக்களின் கட்டாயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.
விமானங்களின் கட்டண வரம்பு என்ன
விமானக் கட்டணங்களுக்கு அரசாங்கம் ஒரு வரம்பை விதித்திருந்தது. இந்த வரம்பின் படி, 40 நிமிடங்களுக்கும் குறைவான உள்நாட்டு விமான பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ .2,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ .6,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
40 முதல் 60 நிமிடங்களுக்கு இந்த வரம்பு ரூ .2,500 ஆகவும், ரூ .7,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 60 முதல் 90 நிமிட விமானத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ .3,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ .9,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
ALSO READ: சர்வதேச விமானங்களின் இடைநிறுத்தம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு!
90 முதல் 120 நிமிடங்களுக்கு வரம்பு ரூ .3,500 மற்றும் ரூ .10,000 ஆகும். 120 நிமிடங்கள் முதல் 150 நிமிடங்கள் வரையிலான பயணத்திற்கு ரூ .4,500 முதல் ரூ .13,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் 150 நிமிடங்கள் முதல் 180 நிமிடங்கள் வரை விமானம் கட்டணம் குறைந்தபட்சம் 5,500 ரூபாயாகவும் அதிகபட்சமாக ரூ .15,570 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது.
விமானக் கட்டணங்கள் மீதான அரசாங்க கட்டுப்பாட்டின் இந்த வரம்பு நவம்பர் 24 வரை விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த வரம்பு இன்னும் மூன்று மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழியில், விமான கட்டணங்களின் வரம்பு இப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பொருந்தும்.
அரசாங்கத்தின் இந்த முடிவு விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இப்போது அனைத்தும் இயல்பாகி வருவதால், உள்நாட்டு விமான சேவையையும் (Domestic Airlines) அரசாங்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சர்வதேச விமான இயக்கத்தின் தடை தொடரும். தற்போது, சர்வதேச விமானங்கள் ஏர் பப்பில் ஒப்பந்தத்தின் கீழ் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ALSO READ: இனி ரயிலில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க 'My Friend' திட்டம் உதவும்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR