99 Rupees Quarter Alcohol: ஆந்திர பிரதேசம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 180 மில்லி லிட்டர் கொண்ட குவாட்டர் பாட்டில் வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கலால் வரி இயக்குநர் நிஷாந்த் குமார் அறிவித்துள்ளார். இது ஏற்கெனவே புதிய மது கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அளவில் மதுபானங்களை தயாரிக்கும் 5 பெரும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் 180 மில்லி மதுபானத்தை வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாக இதுகுறித்து நிஷாந்த் குமார் நேற்று (அக். 17) செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதுமட்டுமின்றி 99 ரூபாய்க்கான குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய 10 ஆயிரம் பெட்டிகள் தற்போது விற்பனைக்கு மதுபான கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் இந்த 99 ரூபாய் குவாட்டரின் விற்பனை தினமும் 20 ஆயிரம் பெட்டிகள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் பேசினார்.


ரூ.5,500 கோடி வருமானம்


மேலும் இந்த அக்டோபர் இறுதிக்குள் 99 ரூபாய் குவாட்டர்கள் அடங்கிய 2.40 லட்சம் பெட்டிகள் சந்தைக்கு வரும் என்றும் ஏறத்தாழ 1.20 கோடி குவாட்டர் பாட்டிகள் இந்த மாதத்திற்குள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் பேசினார். இந்த அக்டோபர் மாதத்தில் இந்த 99 ரூபாய் குவாட்டருக்கு வரும் டிமாண்டை பொறுத்து நவம்பர் மாதத்தில் எத்தனை பாட்டில்களை தயாரிக்கலாம் என முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  


மேலும் படிக்க | Sabarimala: சபரிமலைக்கு செல்வோர் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!


ஆந்திராவில் மட்டும் 3 ஆயிரத்து 736 உரிமம் பெற்ற மதுபான கடைகள் உள்ளன. இங்கு முழுவதும் 99 ரூபாய் குவாட்டர் பாட்டிலை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரா அரசு திட்டமிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான இந்த அரசு 99 ரூபாய் குவாட்டர் பாட்டிலை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 


குறைந்த விலையில் தரமான மதுபானம்


ஆந்திராவில் கடந்த ஏபரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் உடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை இணைந்து இந்த சட்டப்பேரவை தேரத்லை சந்தித்தன. இதில் சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இது பல்வேறு வாக்காளர்களை கவர்ந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு இந்த திட்டத்தை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் எனலாம்.


இந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும் ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் வென்று, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. சந்திரபாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். மாநிலத்தில் மட்டுமின்றி மக்களவையில் இந்த கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியதால் மத்திய கூட்டணி ஆட்சியிலும் தற்போது பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமானால்... வந்தது புதிய கொலை மிரட்டல் - பரபரப்பில் மும்பை போலீஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ