ஜனவரி 1 முதல் RBI புதிய உத்தரவு.. லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு GOOD NEWS
Free Agricultural Loan Updates: லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு நல்ல செய்தி. இனி சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதாக கடன் பெறலாம். கடன் பெறுவதற்கான வரம்பை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
Reserve Bank of India Latest News: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விவசாயிகளுக்கான பிணையில்லா கடன் வரம்பை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக ஜனவரி 1, 2025 முதல், சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிணையில்லா கடன் என்றால் என்ன? பிணையில்லா கடன் மூலம் விவசாயிகளுக்கு என்ன பலன்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
ஆர்பிஐ-யின் புதிய உத்தரவு குறித்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. கடன் வாங்குபவருக்கு ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்களுக்கான பிணை பாதுகாப்பு தேவைகளை தள்ளுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பிணையில்லா கடன் உயர்வு குறித்து வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில், "விவசாயத் துறையை மேம்படுத்தவும், அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் குறிப்பாக சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களான 86 சதவீத விவசாயிகளுக்கு கடன் வாங்கும் செலவுகள் மற்றும் பிணையத் தேவைகளை அகற்றுவதன் குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்று வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட் உள்ளது.
இந்த நடவடிக்கையானது கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன்களை எளிதாக அணுகுவதற்கும், கடன்களை அதிகரிக்கவும், 4 சதவீத பயனுள்ள வட்டி விகிதத்தில் ரூ. 3 லட்சம் வரையிலான கடனை வழங்கும் அரசாங்கத்தின் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தை நிறைவு செய்யும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த முயற்சி விவசாயத் துறையில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் தேவையான நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
மேலும் ஜனவரி 1, 2025 முதல், நாடு முழுவதும் உள்ள வங்கிகள், இந்த பிணையில்லா கடன் உயர்வு குரித்ட வழிகாட்டுதல்களை விரைவாக செயல்படுத்தவும், புதிய கடன் வழங்குதல்கள் குறித்த பரவலான விழிப்புணர்வை உறுதிப்படுத்தவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வேளாண் வல்லுநர்கள் இந்த முயற்சியை கடன் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும், விவசாய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், விவசாய இடுபொருள் செலவுகள் மீதான பணவீக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு முக்கியமான படியாக கருதுகின்றனர்.
பிணையம் என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பைக் கொண்ட சொத்து ஆளும். கடன் வாங்குபவர் வங்கிகளில் இருந்து கடன் வாங்கும் போதும் கடனுக்கான பாதுகாப்பாக ஏதாவது சொத்தை வங்கியில் வைப்பது தான் பிணையம் ஆகும். அதுவே பிணையமில்லாத கடன் என்பது ஒரு வகையான நிதியுதவியாகும். இது கடன் பெறுபவர்கள் கடன் தொகைக்கு எதிராக எந்தவொரு சொத்துக்களையும் அடமானமாக வைக்க தேவையில்லை. மாறாக, கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவரின் தகுதி, வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து கடன் வழங்கப்படும். இதன் அடிப்படையில் தான் விசாயிகளின் நலனுக்காக பிணையமில்லாத கடனை வழங்கி வருகிறது.
மேலும் படிக்க - RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!
மேலும் படிக்க - பொங்கல் 2025: இலவச வேட்டி, சேலை குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி
மேலும் படிக்க - இந்த காரணத்திற்காக தான் பொங்கல் பரிசில் ரூ. 1000 இல்லை! அமைச்சர் கொடுத்த விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ