EPFO Interest Update: நாட்டின்  PF கணக்கு வைத்திருக்கும் சுமார் 6.5 கோடி  பேருக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நல்ல செய்தியை வழங்கியுள்ளது. விரைவில் PF கணக்கில் 8.5% வட்டி பணம் கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இந்த வட்டி பணம் ஜூலை 31 க்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இன்னும் வெளியிடப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

8.5% வட்டி குறித்து EPFO ​​கூறியது என்ன?
 ட்விட்டரில் ஒரு பயனர்  PF வட்டி பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, EPFO ​​கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்படும் போது, ​​மொத்தமாக ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும் என்று கூறினார். யாருக்கும் வட்டி இழப்பு இருக்காது. இருப்பினும் வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை EPFO ​​இந்த ட்வீட்டில் தெரிவிக்கவில்லை. 2020-21 நிதியாண்டில் 8.5% வட்டிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள், பிஎஃப் வட்டி 8.5%  பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில், KYC யில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பல சந்தாதாரர்கள்  வட்டிக்காக காத்திருக்க வேண்டி இருந்தது.


ALSO READ | EPF-Aadhaar Link: 'இந்த' தேதிக்குள் இணைக்கா விட்டால் PF பணத்தை இழக்க நேரிடலாம்..!!


 பிஎஃப்  கணக்கில் உள்ள பணத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?


1. மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் தெரிந்து கொள்ளும் முறை


உங்கள் பிஎஃப்  கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிய, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.பிறகு, EPFO அனுப்பும் மெஸ்சேஜ் மூலம் PF விவரங்களை அறியலாம். இங்கேயும் உங்கள் UAN, PAN மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.


2. ஆன்லைனில் சரிபார்க்கும் முறை
1. ஆன்லைன் பிஎஃப்  கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிய, EPFO ​​இணையதளத்தில் உள்நுழைந்து, epfindia.gov.in  என்ற தளத்தில் உள்ள e-passbook ஐ கிளிக் செய்யவும்.
2. இப்போது e-passbook ஐ க்ளிக் செய்தால், passbook.epfindia.gov.in  என்ற ஒரு புதிய பக்கம் தோன்றும்.
3. இப்போது நீங்கள் உங்கள் பயனர்பெயர் (UAN எண்), பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சாவை நிரப்ப வேண்டும்
4. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கம் தோன்றும். இங்கே நீங்கள் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. இ-பாஸ்புக்கில் உங்கள் EPF இருப்பு தொகையை காணலாம்.


ALSO READ | EPFO புதிய வசதி: அவசர காலத்தில் PF கணக்கிலிருந்து உடனடியாக ரூ. 1 லட்சம் அட்வான்ஸ்


3. UMANG செயலி மூலம் இருப்பு தொகையை அறிதல் 


1.  UMANG செயலியை  (Unified Mobile Application for New-age Governance) திறந்து EPFO ​​ஐ கிளிக் செய்யவும்.
2. இப்போது மற்றொரு பக்கத்தில், ‘employee-centric services’ மீது கிளிக் செய்யவும்.
3. இங்கே நீங்கள் 'View Passbook' என்பதைக் கிளிக் செய்யவும். இதன் மூலம், உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல், OTP எண்ணை நிரப்பவும்.
4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் PF இருப்பை சரிபார்க்கலாம்.


4. எஸ்எம்எஸ் மூலம் இருப்பு தொகையை அறியும் முறை


உங்கள் UAN எண்  EPFO-வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பிஎப் இருப்பு பற்றிய தகவலை பெறலாம். இதற்கு நீங்கள் EPFOHO  என 7738299899  என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். இதன் பிறகு நீங்கள் செய்தி மூலம் PF பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.  தமிழ், ஆங்கிலம்  மொழிகளில் பிஎஃப் இருப்பை  அறிந்து கொள்ளலாம். பிஎஃப் இருப்புக்கு, உங்கள் UAN எண், வங்கி கணக்கு, பான் (PAN) மற்றும் ஆதார் ((AADHAR) இணைக்கப்பட வேண்டும்.


ALSO READ |Aadhaar Card: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR