EPF-Aadhaar Link: 'இந்த' தேதிக்குள் இணைக்கா விட்டால் PF பணத்தை இழக்க நேரிடலாம்..!!

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் மிக முக்கிய சேமிப்பாக இருக்கும் திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டம் (Provident Fund).

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2021, 06:43 PM IST
EPF-Aadhaar Link: 'இந்த' தேதிக்குள் இணைக்கா விட்டால் PF பணத்தை இழக்க நேரிடலாம்..!! title=

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் மிக முக்கிய சேமிப்பாக இருக்கும் திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டம் (Provident Fund). ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் வருங்கால நிதி ஆதாரத்திற்காக இந்த PF தொகை பெரிதும் உதவுகிறது. சம்பள தொகையிலிருந்து குறிப்பிட்ட பணத்தைப் பிடித்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், அதற்கு சமமான அளவில் தங்களது பங்களிப்பை செலுத்தி, இருவர் பங்களிப்பும், மாதா மாதம் பிஎப் கணக்கில் செலுத்தப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகள் மத்திய தொழிலாளர் நலத் துறை மாற்றியுள்ளது. அதில் பிஎப் கணக்குடன் ஆதார் எண் (Aadhaar Card) இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாற்றப்பட்ட விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல் அமல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் இதுவரை ஏராளமானோர் ஆதாருடன் பிஎப் கணக்கை இணைக்கவில்லை என்பதால், இப்போது, இந்த காலக்கெடு செப்டம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பிஎப் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டாது. 

ALSO READ | Aadhaar அட்டையில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா; நொடியில் மாற்றலாம்..!!

ஆதாருடன் பிஎஃப் கணக்கை இணைப்பது எப்படி ?

1. முதலில் நீங்கள் EPFO ​​வலைத்தளமான www.epfindia.gov.in என்ற வலை தளத்தில் உள்நுழைய வேண்டும்.
2. இதற்குப் பிறகு, ஆன்லைன் சேவைகளுக்குச் செல்வதன் மூலம், e-KYC போர்ட்டலைக் கிளிக் செய்து, பின்னர் UAN ஆதார் இணைக்கவும்.
3. உங்கள் UAN எண் மற்றும் UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
4. உங்கள் மொபைல் எண்ணில் ஒரு OTP எண் வரும்.
5. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை ஆதார் பெட்டியில் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்
6. பிறகு அதனை வெரிபை செய்ய OTP வரும், அதைக் கிளிக் செய்யவும்
7. ஆதார் விவரங்களை மீண்டும் சரிபார்க்க, மொபைல் எண் அல்லது ஆதார் உடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சலில் OTP ஜெனரேட் செய்யப்பட வேண்டும்.
8. சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் ஆதார் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும்.

ALSO READ |Aadhaar Card: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News