தனியார் துறை பணியாளர்களுக்கு good news காத்திருக்கிறது: ஆய்வு
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் மேம்பட்ட அரசாங்க திட்டங்கள், செலவினங்கள் மற்றும் நல்ல மழையின் காரணமாக நுகர்வோர் தேவைகள் அதிகரிக்கும் என நிறுவனங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளன.
உலகளாவிய மனிதவள கன்சல்டன்சி நிறுவனமான Aon இன் ஒரு ஆய்வில், இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் அதிக ஊதிய உயர்வு (Salary Hike) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் மேம்பட்ட அரசாங்க திட்டங்கள், செலவினங்கள் மற்றும் நல்ல மழையின் காரணமாக நுகர்வோர் தேவைகள் அதிகரிக்கும் என நிறுவனங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஈ-காமர்ஸ், எரிசக்தி, நிதி நிறுவனங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் தங்கள் ஊழியர்களுக்கு சராசரியாக 7.3% ஊதிய உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் (Indian Companies) வழங்கிய சராசரி உயர்வு 6.1% ஆக இருந்தது. இது கடந்த 14 ஆண்டுகளில் மிகக் குறைவு என்று Aon கணக்கெடுப்பு கூறியுள்ளது. கணக்கெடுப்புக்கான தரவு 20 தொழில்துறைகளைச் சேர்ந்த 1,050 நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு அதிகரிப்பு கண்டிப்பாக இருக்கும் என கூற முடியாது என்றாலும், 2020 ஆம் ஆண்டில் 71% -ஐ ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 87% நிறுவனங்கள் சம்பள உயர்வு அளிக்க திட்டமிட்டுள்ளன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
47% நிறுவனங்கள் பணியாளர்களுக்கு 8% உயர்வை வழங்க வாய்ப்புள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் 44% ஆக இருந்தது. சுமார் 14% நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் பூஜ்ஜிய ஊதிய உயர்வை வழங்கக்கூடும். 2020 இல் இது 29% ஆக இருந்தது.
Aon இன் பங்காளியான Mint உடன் பேசிய நிதின் சேத்தி, “இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் தீவிரம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் ஆழமான தாக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மிகப்பெரிய மீண்டெழும் திறனையும் பணியாளர்கள் திறமை குறித்த முதிர்ச்சியுள்ள கண்ணோட்டத்தையும் காட்டியுள்ளன.” என்று கூறினார்.
“வணிகம் மற்றும் மனிதவளத் தலைவர்கள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் கடினமான முடிவுகளை எடுத்தனர். இப்போது நுகர்வோர் தேவையை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான சாத்தியக்கூறுகளில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். திறமைக்கான முதலீட்டை தங்கள் தேவை, மீட்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளின் முக்கிய பகுதியாக அவர்கள் காண்கிறார்கள்” என்று சேத்தி மேலும் கூறினார்.
ALSO READ: கொரோனா காலத்து தீபாவளியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்கத் தடை!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR