வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு: இன்று (ஏப்ரல் 1ம் தேதி) புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு குறைத்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான நிம்மதி கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம்தான் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.350 அதிகரித்தது. தற்போது இது ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு எல்பிஜி சிலிண்டருக்கு, நீங்கள் முன்பு செலுத்திய அதே தொகையைதான் இப்போதும் நீங்கள் செலுத்த வேண்டும்.


இன்று, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.2028 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2132 ஆகவும், மும்பையில் ரூ.1980 ஆகவும், சென்னையில் ரூ.2192.50 ஆகவும் உயர்ந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் விலை டெல்லியில் ரூ.2119.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2221.50 ஆகவும், மும்பையில் ரூ.2071.50 ஆகவும் இருந்தது. வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன


வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,103 ஆகும். சென்னையில் இதன் விலை ரூ.1118.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,129 ஆகவும், மும்பையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை ரூ.1102.50 ஆகவும் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாட்டின் முக்கிய நகரங்களில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை பட்டியல் இதோ:


டெல்லி - 1 ,103
கொல்கத்தா - 1,129
மும்பை - 1102.50
சென்னை - 1118.50
ஸ்ரீநகர் - 1219
பாட்னா - 1201
ஐஸ்வால் - 1255
அகமதாபாத் - 1110
போபால் - 1118.50
ஜெய்ப்பூர் - 1116.50
ராஞ்சி - 1160.50
பெங்களூரு - 1115.50


மேலும் படிக்க | Old Pension Scheme: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி, திட்டத்தில் மாற்றங்கள் செய்ய தயாராகும் அரசு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ