குறையும் கொரோனா, நீங்கும் நிபந்தனைகள்: இனி மாஸ்க் இல்லாமல் முகம் காணலாம்
கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
மும்பை: சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், மும்பை அதன் முகக்கவச விதியை தளர்த்தியுள்ளது.
இன்று (ஏப்ரல் 1, 2022) முதல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தெரிவித்துள்ளது. இனி, மகாராஷ்டிராவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
எனினும், தொற்றுநோய் முற்றிலும் நீங்காததால் மக்கள் தானாக முன்வந்து முகக்கவசத்தை பயன்படுத்துமாறு குடிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், முகக்கவச ஆணையை திறம்பட அமல்படுத்துவதற்காக, பொது இடங்களில் அதன் தூய்மைப்படுத்தும் மார்ஷல்களை குடிமை அமைப்பு நியமித்திருந்தது.
“தற்போது, கொரோனா தொற்று மற்றும் பரவல் கட்டுக்குள் உள்ளதால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. எனவே, கிரேட்டர் மும்பை பகுதியில் ஒருவர் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றாலும், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படாது" என்று பிஎம்சி வெளியீடு கூறியது. முகக்கவச உத்தரவு ஏப்ரல் 2 முதல் திரும்பப் பெறப்படும் என்று மகாராஷ்டிரா அரசு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையமும் (டிடிஎம்ஏ) தேசிய தலைநகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படாது என்று வியாழக்கிழமை முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு டிடிஎம்ஏ மக்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தற்போது டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக டிடிஎம்ஏ இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், கோவிட் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவது குறித்து சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் புதிய கோவிட் தொற்று எண்ணிக்கையில் கூர்மையான சரிவைக் கருத்தில் கொண்டு, கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு முன்பு அறிவுறுத்தியது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR