Income Tax Slab Latest News: 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. தனிநபர் வருமான வரி விதிப்பில் இந்த முறை என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுக்குறித்து விவரங்களை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பது தான். கடந்த நிதியாண்டுக்கான மோடி அரசின் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாவிட்டாலும், புதிய வரி முறையின் கீழ் வரும் வருமான வரி விதிப்பு அடுக்கில் மாற்றம் செய்யப்பட்டது.


அதன்படி புதிய வருமான வரி விதிப்பில் வருமான விலக்கு உச்ச வரம்பு ரூ,3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்படலாம் என வருமான வரி செலுத்துவோர் எதிர் பார்த்துள்ளனர். 


அதேநேரம் கடந்த பட்ஜெட்டில் பழைய வருமான வரிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் வரிவிலக்கு உச்ச வரம்பு 25 லட்சம் ரூபாயாக தொடர்ந்தது. பழைய வரிவிதிப்பு முறையால் கிடைக்கும் வரி விலக்குகளால் நடுத்தர மக்களுக்கு ஆதாயம் இல்லாததால், அவர்கள் புதிய வரிமுறைக்கு மாறி வருகின்றனர் என்பது கணக்குத் தணிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது.


இந்நிலையில் எதிர்வரும் 2025-26 பட்ஜெட்டில் பழைய வருமான வரி விதிப்பு முறை முழுமையாக அகற்றப்படலாம் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதாவது புதிய வருமான வரி விதிப்பில் இருக்கும் அப்பர் லிமிட்டை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவோ அல்லது ரூ.15 லட்சமாகவோ மாத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை இப்படி நடந்தால், புதிய வருமான வரி விதிப்பை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். 


ஏனென்றால், தற்போது வரை ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் வரை ஈட்டியவர்கள், இதுவரை ஏறக்குறைய ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை வருமான வரி செலுத்தி வந்தார்கள். வரும் பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பில் அப்பர் லிமிட்டை ரூ.15 லட்சமாக உயர்த்தினால்.. இனி இவர்கள் வரி கட்டத் தேவையில்லை. 


எனவே சுமார் 90 சதவீத மக்கள் புதிய வருமான வரி விதிப்புக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக பழைய வரி விதிப்பு முறை முற்றிலுமாக அகற்றப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்தாக இருக்கிறது.


தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என இந்த ஆண்டும் வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிதி அமைச்சரின் அறிவிப்பு நிறைவேற்றுமா? என்ற கேள்விக்கு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி விடை கிடைத்துவிடும்.


மேலும் படிக்க - Budget 2025: APY, NPS, UPS, EPS... பட்ஜெட்டில் ஓய்வூதியத் திட்டங்களில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்


மேலும் படிக்க - Budget 2025, Old Tax Regime vs New Tax Regime: முக்கிய மாற்றங்கள்.... எந்த வரி முறை அதிக பலனளிக்கும்?


மேலும் படிக்க - Budget 2025: வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் இரண்டு நல்ல செய்திகள், விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ