புதுடில்லி: தேசிய தலைநகரில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் கடந்த மாதம் முதல் விதிக்கப்பட்டுள்ள சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. டெல்லியில் மிக அதிகமக உயர்ந்துகொண்டிருந்த கோவிட் -19 தொற்றுநோயின் எண்ணிக்கை தற்போது நல்ல வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் (Delhi) போடப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 1 முதல் படிப்படியாக தளர்த்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது சில குறிப்பிட்ட வணிகங்கள், கடைகள் ஆகியவை ஜூன் 1 முதல் டெல்லியில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டுமானங்களுக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் போன்றவற்றை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. 


மால்கள், ஸ்பாக்கள், ஜிம்கள் ஆகியவை திறக்கப்பட மாட்டடாது. 


இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கோவிட் -19 நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால், மே 31 முதல் கட்டம் கட்டமாக டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்" என்று கூறினார்.


ALSO READ: டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு


தேசிய தலைநகரில் COVID-19 நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், நேர்மறை விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக ஊரடங்கை தளர்த்த அரசாங்கம் இப்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் சிகிச்சையில் இருப்பவர்களின் தினசரி எண்ணிக்கை 1500-1600 ஆக இருந்து வருகிறது. 


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,491 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். 3,952 பேர் குணமடைந்துள்ள நிலையில், 130 இறப்புகள் பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் 1.93% ஆக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் குறைவான விகிதமாகும்.


இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு புதிதாக COVID நோய் ஏற்பட்டுள்ளது.  4,157 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24,95,591ஆக  உள்ளது.  


ALSO READ: கொரோனா தொற்றால் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு: டெல்லி முதல்வர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR