போலி மற்றும் மோசடி பெயரில் வாங்கப்பட்ட 11.44 லட்சம், பான் கார்டை அரசு முடக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை சமீபத்தில் கட்டாயமாக்கியது மத்திய அரசு. இதில் பலர் போலி பெயர் மற்றும் முகவரியில் பான் கார்டு வாங்குவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.


இந்நிலையில் ஒருவர் பெயரிலேயே, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும், 11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


இந்நிலையில், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை, மிகவும் சுலபமாக தெரிந்து கொள்ளும் வசதியை, வருமான வரித் துறை செய்துள்ளது. இதற்காக, 


> http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று, இந்த தகவலை சரிபார்த்து கொள்ள முடியும்.


> அந்த இணையதளத்தில், 'சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'நோ யுவர் பான்' என்பதற்குள் நுழைய வேண்டும். 


> அதில் கேட்கப்படும், பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். 


> அதைத் தொடர்ந்து அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஒரு ரகசிய எண் வரும். அதைப் பதிவு செய்தால், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.


மத்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி 29 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 6.2 கோடி பேர், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நாடு முழுவதும் 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றனர்.