புதுடெல்லி: ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு சில அமைச்சகங்கள் பதில் அளித்தபோதிலும், வேறு சில அமைச்சகங்கள் உரிய பதில் அளிக்கவில்லை.


அதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நிதி ஆலோசகர்களையும், அனைத்து அமைச்சகங்களின் இணை செயலாளர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.