ஒரு பக்கம் போனஸ், மறுபக்கம் போராட்டம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!
Diwali Bonus & Old Pension Scheme: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ். ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வு புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முடிவு.
Government Employees News Latest Update: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் வந்துள்ளது. மத்திய அமைச்சரவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்
அதன்படி 11,7,240 ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.2029 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்த அறிவிப்பினால் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெற இருக்கிறார்கள்.
அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் அறிவிப்பு எப்போ?
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் குறித்த அறிவிப்பும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் முன்னெடுக்க அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆவடியில் உள்ள ஓசிஎப் தொழிற்சாலை முன்பாக அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர் சம்மேளனத்தினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வு புதிய திட்டம் என இரண்டுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் போராட்டம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடியாது
இதை அடுத்து மத்திய அரசு நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையில் மத்திய அரசு கமிட்டி அமைத்தது. ஆனால் அந்த கமிட்டி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிந்துரைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
அதற்கு பதில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இது சேவை காலம் சராசரி. கடைசி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சதவிகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
விரோத திட்டங்கள் -அகில இந்திய பாதுகாப்புஊழியர் சம்மேளனம்
இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டும் விரோத திட்டங்கள் என்று அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ