போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan) இன்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் (Coronavirus Pandemic) தொற்றுநோயின் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வேலை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முடிவை அவர் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"மத்திய பிரதேச அரசு (Madhya Pradesh government) இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும். அதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வோம். மத்திய பிரதேசத்தின் வளங்கள் மத்திய பிரதேசத்தின் குழந்தைகளுக்கு மட்டுமே" என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தனது வீடியோ அறிக்கை மூலம் தெரிவித்தார்.


ALSO READ |  மத்திய ரயில்வேயில் பணியாற்ற ஒரு சிறந்த வாய்ப்பு - இதோ முழு விவரம்!!


மத்திய பிரதேசத்தின் இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் (Government Jobs) முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் சவுகான் முன்பு கூறியிருந்தார். "மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். வேலை வாய்ப்புகள் பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் நமது மாநில இளைஞர்கள் குறித்து அக்கறை கொள்வது நமது கடமையாகும்" என்று அவர் சனிக்கிழமை சுதந்திர தின உரையில் கூறியிருந்தார்.


ALSO READ |  Corona Impact: இனி வளைகுடா நாடுகளின் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு நிலைக்குமா?


"உள்ளூர் இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் (Class X and XI) மதிப்பெண்களின் அடிப்படையில் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.