J&K விவகாரத்தில் பாக்.,-க்கு மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது: VK.சிங்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்!!
ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் வார்த்தைகளை மீண்டும் வலியுறுத்திய மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான SV.சிங், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசிடம் சிறப்பு திட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜெனரல் சிங், இராணுவத் தலைமை அறிக்கைக்கு பதிலளித்து வந்தார். அதில் ஜெனரல் ராவத், பாக்., நடவடிக்கைக்கு இராணுவம் எப்போதும் தயாராக இருப்பதாக கூறியிருந்தாலும், அது மத்திய அரசு உத்தரவுக்காகக் காத்திருக்கிறது என்று கூறினார்.
முன்னதாக செவ்வாயன்று, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இப்போது பாக்.,ன் சில பகுதிகளை மீட்டெடுத்து அவற்றை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியிருந்தார். "அடுத்த நிகழ்ச்சி நிரல் பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை மீட்டெடுப்பது மற்றும் அதை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்குவது. இது எனது கட்சியின் அர்ப்பணிப்பு மட்டுமல்ல, 1994-லில் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதியாகும்" என்று சிங் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினையில் மட்டுமே இந்தியா இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அப்போது அவரிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடவடிக்கை எடுக்க முப்படைகளும் தயார் என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்றும் ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்து வி.கே.சிங் கூறுகையில் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக அரசு சிறப்பு உத்தியை வைத்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.