E-Commerce நிறுவனங்களுக்க அதிரடி உத்தரவு.. பொருட்கள் பற்றிய Country of origin தகவல் வேண்டும்
மத்திய அரசு அதிரடி!! இனி ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் விற்கப்படும் பொருட்களை தயாரிக்கும் நாடு பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்
புதுடெல்லி: சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் முன்னெடுத்து வரும் நேரத்தில், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இப்போது அனைத்து நிறுவனங்களையும் தங்கள் இணையதளத்தில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது (Country of origin) என்பது குறித்த தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த நிபந்தனைகள் மூலம், பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) போன்ற வலைத்தளங்கள், இப்போது தங்கள் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களை தயாரிக்கும் நாடுகளை பற்றி சொல்ல வேண்டியிருக்கும்.
ஆகஸ்ட் 1 முதல் இந்த விதியைப் பின்பற்றுமாறு வர்த்தக அமைச்சகத்தின் டிபிஐஐடி (DPIIT) இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் பொருள் ஆகஸ்ட் 1 முதல், இந்த வலைத்தளங்களில் எந்தவிதமான பொருட்கள் விற்கப்பட்டாலும், அதை தயாரிக்கும் நாடு பற்றிய தகவலை குறிப்பிடுவது கட்டாயமாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: தீவிரப்படுத்தப்பட்ட #BOYCOTTCHINESPRODUCT பிரச்சாரம்
இருப்பினும், இந்த இ-காமர்ஸ் (E-Commerce Companies) நிறுவனங்கள் சிறிது கால அவகாசம் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்த விதியைப் பின்பற்ற சிறிது காலநேரம் எடுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே நேரத்தில், இந்த நடவடிக்கையால் சீன நிறுவனங்கள் (Chinese-made products) மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வது கடினம். ஏனென்றால், தற்போதைய விதிப்படி, விற்கப்படும் பொருட்களை எந்த நாட்டு தயாரிக்கிறது என்பது குறித்த தகவல்களை நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
இந்திய அரசின் (Government of India) வர்த்தக (Trade Ministry) மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், சீனாவைச் சுற்றிலும் சுற்றிவளைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரத்தில் முன்னோக்கி செல்லும் சீனா (China) மிகவும் பாதிக்கப்படும். இதற்காக முழு திட்டமும் மத்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு சீன நிறுவனங்கள் குறித்து கடுமையான விசாரணை நடத்தப்படும்.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் சீனாவின் 59 செயலிசெயலிகள் தடை....
ஆன்லைன் நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (Confederation Of All India Traders) அரசிடம் தெரிவித்துள்ளது. சீன தயாரிப்புகள் பெரும்பாலானவை இ-காமர்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகின்றன என்று கேட் (CAIT) அமைப்பு கூறியுள்ளது.
சீனத் தயாரிப்புகளை (Boycott China) புறக்கணிக்க வர்த்தக குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு தேசத்திற்கான (Self-Reliant Nation) அழைப்பை முன்வைத்துள்ளார். 59 சீன பயன்பாடுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் இந்திய துறைமுகங்களுக்கு வரும் உள்ள சீனப் பொருட்களும் கூடுதல் சோதனை மற்றும் தாமதங்களை எதிர்கொண்டுள்ளன.
இதையும் படியுங்கள்: 'Boycott China' டிராகன் வர்த்தகத்தில் 30% முதல் 50% வரை சரிய வாய்ப்பு