தமிழக அரசு தாராள மனதை காட்ட வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்..!
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமான சேவைத்துறை சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பிரபல விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், முதன் முதலில் ஹைதரபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மீண்டும் பெங்களூர் டூ புதுச்சேரிக்கும் விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்ததையடுத்து விமான சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த விமானத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பயனிகள் வந்தனர். அவர்களை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க |
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் புதுச்சேரியில் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்றும் அடுத்த கட்டமாக திருப்பதியைபோல ஆன்மீகம் மற்றும் தலை நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை ஒட்டி புதுச்சேரி உள்ளதால் தமிழக அரசு கணக்கு பார்க்காமல் புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தால் தமிழகத்தை சார்ந்தவர்களும் பயனடைவார்கள் எனவும் கூறினார்.
மேலும் படிக்க |
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR