பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi) இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை நேற்று தொடங்கி வைத்தார். குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள சாபர்மதி ஆற்றங்கரையில், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவடியாவில் அமைந்துள்ள ஸ்டாச்யூ ஆஃப் யூனிட்டியை இது இணைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது இந்தியாவின் (India) முதல் கடல் விமான (Sea-Plane) சேவையாகும்.


இந்த கடல் விமானத்தின் சிறப்பு என்னவென்றால், அது தண்ணீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும். இதன் மூலம், நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறக்கவும் செய்யலாம். கடல் விமானம் பறக்க ஓடு பாதை தேவையில்லை, மேலும் அது எந்த நீர்த்தேக்கத்தையும் ஓடு பாதையாக பயன்படுத்திக் கொண்டு பறக்க முடியும். 19 பயணிகள் ஒரே நேரத்தில் கடல் விமானத்தில்  பயணிக்க முடியும்.


இந்நிலையில், நாடு முழுவதும் கடல் விமான (Sea-Plane )சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் விரிவாக செயல்பட்டு வருகிறது. புதிய முடிவின் கீழ் மேலும் 14 நீர் சார்ந்த நிலையங்களை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. 


நாட்டில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி காணும் வகையில் இதுபோன்ற சேவைகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவல்களை வழங்கிய, ​​கப்பல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் பிராந்திய விமான இணைப்பு விமான திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுபோன்ற 14 நீர் சார்ந்த நிலையஙக்ளை கட்டமைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்திய விமான நிலைய ஆணையமும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்திடமும், இது தொடர்பான தகவல்களை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.


ALSO READ | பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்த கடல் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR