பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்த கடல் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..!!!

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி இன்று குஜராத்தில், தொடக்கி வைத்தார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2020, 04:04 PM IST
  • இந்த கடல் விமான சேவை (Sea Plane Sevice) சபர்மதி நதியையும், ஸ்டாச்யூ ஆஃப் யூனிட்டியையும் (statue of unity) இணைக்கும் கடல் விமானம்
  • இந்த கடல்-விமானம், நீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும். அதே நேரத்தில் தரையிறங்கவும் முடியும்.
  • இந்த கடல் விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பயணிகள் பயணம் செய்யலாம்
பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்த கடல் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..!!! title=

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி இன்று குஜராத்தில், தொடக்கி வைத்தார்

இந்த கடல் விமான சேவை (Sea Plane Sevice) சபர்மதி நதியையும், ஸ்டாச்யூ ஆஃப் யூனிட்டியையும்  (statue of unity) இணைக்கும் கடல் விமானம்

இந்த கடல்-விமானம், நீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும். அதே நேரத்தில் தரையிறங்கவும் முடியும்.இந்த கடல் விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பயணிகள்  பயணம் செய்யலாம்

பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi) இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை தொடங்கி வைத்தார். குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள சாபர்மதி ஆற்றங்கரையில், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவடியாவில் அமைந்துள்ள ஸ்டாச்யூ ஆஃப் யூனிட்டியை இது இணைக்கும் 

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் பல்லபாய் படேலின் (sardar vallabhai patel) பிறந்த தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கெவாடியா சபர்மதி சீப்ளேன் (Sea Plane) சேவையைத் (Kevadia Sabarmati Seaplane Service) தொடங்கினார். பதவியேற்புக்குப் பிறகு, பிரதமர் மோடியே கெவடியாவிலிருந்து அகமதாபாத் கடல் விமானம் வழியாக பயணம் செய்தார்.

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை

இது இந்தியாவின் (India) முதல் கடல் விமான (Sea-Plane) சேவையாகும், இது அகமதாபாத்தில் உள்ள சபர்மதி (sabarmati) ஆற்றங்கரையை நர்மதா மாவட்டத்தில் கெவடியாவில் அமைந்துள்ள ஒற்றுமை சிலையை இணைக்கும். முன்னதாக, 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் கடைசி நாளில் பிரதமர் மோடி கடல் விமானத்தின் மூலம் சபர்மதி நதி யிலிருந்து, மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள தரோய் அணை வரை பயணம் செய்தார்.

ALSO READ |  கொரோனாவிலும் 45,000 கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்து அசத்தும் முதல்வர் யோகி..!!!

இந்த கடல் விமானத்தின் சிறப்பு என்ன

இந்த கடல் விமானத்தின் சிறப்பு என்னவென்றால், அது தண்ணீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும். இதன் மூலம், நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறக்கவும் செய்யலாம். கடல் விமானம் பறக்க ஓடு பாதை தேவையில்லை, மேலும் அது எந்த நீர்த்தேக்கத்தையும் ஓடு பாதையாக பயன்படுத்திக் கொண்டு பறக்க முடியும். 19 பயணிகள் ஒரே நேரத்தில் கடல் விமானத்தில்  பயணிக்க முடியும்.

கெவாடியா முதல் சபர்மதி வரை தொடங்கிய கடல் விமான சேவையின் ஒரு வழி கட்டணம் ரூ .1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 கி.மீ பயணம் வெறும் 40 நிமிடங்களில் நிறைவடையும். இந்த தூரத்தை சாலை வழியாக கடக்க நான்கு மணி நேரம் ஆகும். 

ALSO READ | இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். ட்ரோன்... விரட்டி அடித்த இந்திய பாதுகாவல் படை..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News