வாகன உரிமையாளர்கள், வாகனப் பதிவின் போது தங்கள் செல்போன் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: 2020 ஏப்ரல் 1 முதல் வாகனப் பதிவு, மாசு சான்றிதழ், புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கு வாகன உரிமையாளர்களின் மொபைல் எண்களை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு புதன்கிழமை முன்மொழிந்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 30 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்துக்களை அழைக்கும் வரைவு அறிவிப்பை வெளியிட்டது. 


பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் தனிப்பட்ட தரவுகளை செயலாக்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிநபர் தரவு பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அனுமதித்த நேரத்தில் இதுவும் வருகிறது. வாகன பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றுக்காக வாகன ஓட்டுனரின் தனிநபர் விவரங்கள் கேட்டுப் பெறப்படுகின்றன. இது தொடர்பான ஆவணங்கள் யாவும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தயாரித்துள்ள வாகன் தகவல் பதிவேட்டில் சேமித்து வைக்கப்படுகின்றன. இதில் பதிவு செய்யப்பட்ட ஏராளமான வாகனங்களில், தொலைபேசி எண்கள் இணைக்கப்படவில்லை என தெரிய வந்தது.


இதையடுத்து வாகனப் பதிவு, மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ், உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளின்போது வாகன உரிமையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, வரைவு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.


வரும் ஏப்ரல் மாதம் முதல் கார்களுக்கு எந்த விதமான சேவையையும் பெறுவதற்கு வாகன பதிவு சான்றிதழுடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேணடியது கட்டாயமாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலைக் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வாகன விபத்துகளை குறைக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை வாகன எண்ணுடன் இணைப்பதன் மூலம் இதனை முனைப்புடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.