First patient of Green fungus in India: கொரோனா வைரஸ் தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக பல பூஞ்சைகள் பூதாகாரமாய் கிளம்பி வருகின்றன. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சையைத் தொடர்ந்து இப்போது இந்தியாவில் ஒருவர் பச்சை பூஞ்சையால் (Green Fungus) பாதிக்கப்பட்டிருப்பது பற்றி தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரு நபருக்கு பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபரின் வயது 34 ஆகும். 


இது குறித்து இந்தூர் சுகாதாரத்துறை மேலாளர் அபூர்வா திவாரி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நாட்டிலேயே முதன்முதலாக இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 34 வயதான ஒருவருக்கு பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். 34 வயதான அந்த நபர் கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது அவருக்கு பச்சை பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபூர்வா திவாரி கூறியுள்ளார். அந்த நபருக்கு இந்தூரின் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை நடந்து வந்தது. அவரது நுரையீரலில் 90 சதவீத தொற்று இருந்தது. 


ALSO READ: COVID தடுப்பூசி பக்க விளைவால் ஒருவர் உயிர் இழப்பு: உறுதி செய்தது அரசு


அவரது உடல் நிலை சரியாகாமல் தொடர்ந்து பிரச்சனை இருந்ததால், பல வித பரிசோதனைகள் அவருக்கு செய்யப்பட்டன. இறுதியாக, தற்போதைய நோயறிதல் பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் (Lungs) பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நாட்டில் உறுதி செய்யப்பட்ட முதல் பச்சை பூஞ்சை வைரஸ் தொற்றாகும் இது என்று அவர் மேலும் தெரிவித்தார். 


இந்தூரில் அந்த நோயாளிக்கு பச்சை பூஞ்சை நோய் உறுதியான பிறகு, அவர் அடுத்த கட்ட சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 


அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து அவர் குணமடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். “நோயாளி குணமடைந்தார். ஆனால் பின்னர் அவருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. மேலும் அவருக்கு அதிக காய்ச்சல் இருந்தது. உடல் எடை இழப்பு காரணமாக அவர் மிகவும் பலவீனமானார்." என்று இந்தூர் மருத்துவமனை மருத்துவரகள் மேலும் தெரிவித்தனர்.


COVID-19 இலிருந்து மீண்ட நபர்களில் பச்சை பூஞ்சை தொற்றுநோய் ஏற்படுவது எவ்வளவு சாத்தியம் என்பது குறித்தும், இதன் அறிகுறிகள் மற்ற பூஞ்சைகளிலிருந்து வேறுபட்டு இருக்குமா என்பது குறித்தும் இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று மருத்துவமனை சார்பில் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.


COVID-19 நோயாளிகளிடையே பீதியை விளைவிக்கும் வகையில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை (Black Fungus), வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சைகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பச்சை பூஞ்சையால் அச்சம் அதிகமாகியுள்ளது!!


ALSO READ: New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR