Black Fungus: மியூகோமிகோசிஸ் பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?

கொரோனா நோயாளிகளிடம் கண்டறியப்பட்ட மியூகோமிகோசிஸ் (பூஞ்சை தொற்று) பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 05:27 PM IST
Black Fungus: மியூகோமிகோசிஸ் பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது? title=

Black Fungus Symptoms: கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க நாம் சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது, மியூகோமிகோசிஸ் (Mucormycosis) என்ற பூஞ்சை தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொண்டு, அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை (Black fungus) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 120 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று வரை 518 பேர் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இந்த நோய் காரணமாக பலர் இறந்துள்ளனர். பலர் கண் பார்வைவை இழந்துள்ளனர்.

நாட்டில் தமிழ்நாடு (Black Fungus cases in Tamil Nadu) , தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது

மியூகோமிகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?
மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பாதிப்பு, பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு இந்த மியூகோமிகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

ALSO READ |  Black fungus தொற்று என்பது என்ன? அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?

கோவித்-19 பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டு உள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆலோசனைப்படி, கொவிட்-19 நோயாளிகளில் கீழ்கண்ட நிலையில் இருக்கும்  கோவிட்-19 நோயாளிகளுக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு அபாயம் அதிகம்.

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

நீண்ட நாட்களாக ஐசியு-ல் இருந்தவர்கள்/ இணை நோய் உள்ளவர்கள்/ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்/ புற்றுநோய் / தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் போன்றோர்.

கருப்பு பூஞ்சை பொதுவான அறிகுறிகள் என்ன?
நெற்றி, மூக்கு, கன்னத்து எலும்புகள்,  கண்கள் மற்றும் பற்களுக்கு இடையில் அமைந்துள்ள காற்றுப் பைகளில் தோல் தொற்றுநோயாக மியூகோமிகோசிஸ் வெளிப்படத் தொடங்குகிறது.

ALSO READ |  சிக்கன் சாப்பிடுதால் கருப்பு பூஞ்சை பரவுகிறதா? வைரலாகும் போஸ்டர்

கொவிட் -19 நோயாளிகளுக்கு, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் அல்லது அடக்கும்  இம்யூனோமோடூலேட்டிங் மருந்துகளை நிறுத்துமாறு  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது  வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது. முறையான சுகாதாரமான சூழலை பராமரிப்பதும், இந்த பாதிப்பை தவிர்க்க உதவும்.  ஆக்ஸிஜன் சிகிச்சை எடுக்கும் நோயாளிகளுக்கு, ஹூயுமியூடிபயர் சாதனத்தில் தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும், சீரான இடைவெளியில் தண்ணீர் மாற்றப்பட வேண்டும்.

நோயாளிகள், கை சுத்தம், உடல் சுத்தத்தை பராமரிக்க வேண்டும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News