COVID தடுப்பூசி பக்க விளைவால் ஒருவர் உயிர் இழப்பு: உறுதி செய்தது அரசு

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பலருக்கு பலவித அச்சங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ, அல்லது, பெரிய பக்க விளைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 15, 2021, 08:03 PM IST
  • கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பலருக்கு பலவித அச்சங்கள் உள்ளன.
  • தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஒருவர் இறந்ததாக தற்போது அதிகாரப்பூர்வ செய்தி வந்துள்ளது.
  • அரசாங்க குழு ஒன்று இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.
COVID தடுப்பூசி பக்க விளைவால் ஒருவர் உயிர் இழப்பு: உறுதி செய்தது அரசு title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பலருக்கு பலவித அச்சங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ, அல்லது, பெரிய பக்க விளைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த அச்சத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில், சமீபத்திய செய்தி ஒன்று வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் (Coronavirus) தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அனபிலாக்சிஸ் (anaphylaxis) என்ற உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை காரணமாக 68 வயதான ஒருவர் இறந்தார். இதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. பக்க விளைவுகளை ஆய்வு செய்யும் நோய்த்தடுப்பு குழுவில் உள்ள அரசாங்க குழு, தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் தீவிர விளைவுகள் ஏற்பட்ட 31 இறப்புகளின் மதிப்பீட்டை வெளியிட்டது. அவற்றில் ஒருவர் தடுப்பூசியால் ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமை காரணமாக இறந்ததாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. 

"தடுப்பூசிக்குப் (Vaccine) பிறகு ஏற்பட்ட அனாபிலாக்ஸிசால் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பது பற்றி எமது ஆய்வில் முதன் முறையாக பார்க்கிறோம்" என்று ஏஇஎஃப்ஐ தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறினார். இருப்பினும், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். 

ALSO READ: TN COVID-19 Update: ஒரே நாளில் 11,805 பேர் பாதிப்பு, 267 பேர் உயிர் இழப்பு

AEFI கமிட்டியின் அறிக்கையில் மொத்தம் மூன்று தடுப்பூசி தொடர்பான இறப்புகள் இருந்தன. ஆனால் அரசாங்கம் இதுவரை ஒன்றை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில், தடுப்பூசி மூலம் அனாபிலாக்ஸிஸ் ஏற்பட்டு இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"தடுப்பூசி தொடர்பான எதிர்வினைகள் (Vaccination Side Effects)தற்போதைய விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய எதிர்விளைவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஒவ்வாமை மற்றும் அனாபிலாக்ஸிஸ் போன்றவையாகும் " என்று குழு அறிக்கை கூறியுள்ளது.

31 AEFI இறப்புகளில், 18 பேரது இறப்பு தடுப்பூசிக்கு பிறகு நடந்திருந்தாலும், அவை தற்செயலான மரணங்கள் என குழு பட்டியலிட்டது. மேலும் ஏழு பேரது மரணத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என்றும் இருவரது மரணம் வகைப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

"வகைப்படுத்த முடியாத நிகழ்வுகள் என்பவை, ஆராயப்பட்ட ஆனால், முக்கியமான தகவல்கள் இல்லாததால் நோயறிதலை வழங்குவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் உள்ள நிகழ்வுகள் ஆகும். தேவையான தகவல்கள் கிடைத்தவுடன் இந்த ​​வழக்குகள் மதிப்பீட்டிற்காக மறுபரிசீலனை செய்யப்படலாம்" என்று AEFI குழு கூறியது.

ALSO READ: New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News