உச்சத்தை எட்டிய ஜிஎஸ்டி வசூல்; ஏப்ரல் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு
ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதத்தை விட 25 ஆயிரம் கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் சுமார் ரூ.1.68 லட்சம் கோடி. இதுவே ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூலாகியதாக, மத்திய நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன,. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதையே இது காட்டுகிறது. ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் மார்ச் மாதத்தை விட 25 ஆயிரம் கோடி அதிகம். முன்னதாக மார்ச் மாதத்தில், ரூ.1.42 லட்சம் கோடி வசூலானது.
சிறந்த வகையிலான இணக்கம், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிரான அமலாக்க துறையின் நடவடிக்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வேகம் ஆகியவற்றின் காரணமாக ஜிஎஸ்டி வசூல், 2021 ஏப்ரல் மாத அளவில் இருந்து 20 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது.
மேலும் படிக்க | ஜிஎஸ்டியில் புதிய மாற்றம்! சாமானியர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது?
ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,67,540 கோடி என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.33,159 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.41,793 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.81,939 கோடியாகும்.
வரி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்வது சாத்தியாமாகியுள்ளது. மேலும், தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில், தவறு செய்யும் வரி செலுத்துவோர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல், இதில் மத்திய மற்றும் மாநிலங்களின் வருவாயும் அடங்கும். இது இதுவரை இல்லாத அளவு கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ரூ.1.42 கோடியை விட 25 ஆயிரம் கோடி அதிகம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்தது.
மேலும் படிக்க | GST: ஏப்ரல் 1 முதல் மிகப்பெரிய மாற்றம், நிறுவனங்கள் மீது நேரடி தாக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR