ஜிஎஸ்டியில் புதிய மாற்றம்! சாமானியர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது?

ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் சிக்கல்களை சரிசெய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வரி விகிதத்தில் தற்போது சில மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் கொண்டு வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2022, 03:06 PM IST
  • ஜிஎஸ்டியில் ஒரு சதவீதம் ஏற்றப்பட்டால் வருடத்திற்குச் சுமார் 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும்.
  • தற்போது புதிதாக ஒரு வரிப் பலகை (3, 8, 12, 18, 28) கொண்டு வருவதன் மூலம் கூடுதலான சுமை உருவாகலாம்.
ஜிஎஸ்டியில் புதிய மாற்றம்! சாமானியர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கிறது? title=

முன்னதாக 5, 12, 18, 28 ஆகிய 4 பலகைகளின் கீழ் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. ஒவ்வொரு வகையான பொருட்களுக்கும் ஒவ்வொரு வகையான வரி பலகை விதிக்கப்பட்டிருந்தது. அதாவது அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீத வரியும், ஆடம்பரப் பொருட்களுக்கு 28 சதவீதம் வரை வரியும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வரியானது மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் நோக்கில் செயல்முறைக்கு வந்தது. இதில் எது அத்தியாவசியம் எது ஆடம்பரம் என்ற பல்வேறு சிக்கல்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில் வரும் மே மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி பலகையை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 3 சதவீதம் மற்றும் 8 சதவீதப் பலகைகள் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புகளால் (5, 12, 18, 28) வர்த்தகச் சந்தையில் அதிக குழப்பங்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஒரு வரிப் பலகை (3, 8, 12, 18, 28) கொண்டு வருவதன் மூலம் கூடுதலான சுமை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GST
அதாவது, 5 சதவீத வரி பலகையில் விற்கப்படும் பொருட்களில் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களை 3 சதவீத அடுக்கிலும், மற்றப் பொருட்களை 8 சதவீத அடுக்கிலும் பிரித்து வைக்க  ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

ஆனால் இது ஒரு வகையில் நன்மை என்றாலும், மற்றொரு வகையில் பார்த்தால் மிகப்பெரிய ஆப்பாக அமையலாம் என்றும் நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த ஆப்பு என்னவென்றால் ஒருவேளை 5 சதவீதத்தில் 100 பொருள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் 70 பொருட்கள் 3 சதவீதத்திற்கும், 30 பொருட்கள் 8 சதவீதத்திற்கும் மாற்றப்பட்டால் அது நடுத்தர மக்களுக்கு லாபமாக அமையலாம். 

மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஆனால் 70 பொருட்கள் 8 சதவீத வரி பலகைக்கு மாற்றப்பட்டு 30 பொருட்கள் 3 சதவீதத்திற்கு மாற்றப்பட்டால் அது அண்றாட வாழ்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பயப்படவேண்டிய விஷயம் தானே.

சொல்லப்போனால் இந்த 5 சதவீத வரி பலகையில் வரும் பொருட்களையே நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி மாற்றத்தால் சில பொருட்களின் விலை குறைந்தாலும், சில பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது தெரியவருகிறது.

மேலும் கவனிக்கதக்க விஷயம் என்னவென்றால் ஜிஎஸ்டியில் ஒரு சதவீதம் ஏற்றப்பட்டால் வருடத்திற்குச் சுமார் 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்குமாம்.

மேலும் படிக்க | ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News