ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; சில பொருட்களின் வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் ஜூன் 28-29 தேதிகளில் நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த வாரம் சண்டிகரில் நடைபெறும் நிலையில், ஒரு சில பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களில் மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் 215 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விகிதங்களில் தற்போதைய நிலையை பராமரிக்க வேண்டும் என்ற அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் ஜூன் 28-29 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கவுன்சில் கூடுகிறது.
மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவற்கான 5 ஆண்டு கால வரையறை ஜூன் மாதத்தில் முடிவடையும் நிலையில், இழப்பீட்டை வழங்குவதற்கான காலத்தை நீட்டிக்குமாறு, எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் திவீரமாக கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விகிதங்களில் அதிகாரிகள் குழு அல்லது ஃபிட்மென்ட் குழுவால் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்களில், செயற்கை உறுப்புகள் (செயற்கை மூட்டுகள்) மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மீது ஒரே மாதிரியான 5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் வேண்டும் என்பதாகும். தவிர, மூட்டு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் (ஸ்பிளிண்டுகள், பிரேஸ்கள், பெல்ட்கள் மற்றும் காலிப்பர்கள்) மீதான் வரியை 5 சதவீதமாக குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போது, இந்த பொருட்கள் மீது 12 மற்றும் 5 சதவீத வரி விகிதம் விதிக்கப்படுகிறது.
மேலும், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கான வரி விகிதங்கள் 'பூஜ்யமாக' குறைக்கப்படும். தற்போது, ஜிஎஸ்டி விகிதம் தொடர்பால்க தெளிவின்மை காரணமாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
டெட்ரா பாக் மீதான வரி விகிதத்தை தற்போது 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. மேலும், மின் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்து விளக்கமளிக்கப்படும், மின் வாகனங்கள், பேட்டரி பொருத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், 5 சதவீத வரி விகிதம் விதிக்கப்படலாம். தவிர, பொதுவாக புகைபிடிப்பதை நிறுத்த உதவும் நிகோடின் போலரிலெக்ஸ் கம், மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என குழு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியச் செய்தி - ஜூன் 30 கடைசி தேதி
கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, வரி விகிதங்கள் தொடர்பான தனது பரிந்துரையை ,குழு வழங்குகிறது. இம்முறை 215க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளில் வரி விகிதங்களில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதே சமயம், ஆன்லைன் விளையாட்டுகள், கசினோ, குதிரை ரேசிங் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 28% ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கசினோ, குதிரை ரேசிங், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வரும் நிலையில், கசினோ, குதிரை ரேசிங், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்கும்படி மேகாலயா முதல்வர் கோன்ராட் சங்மா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
முன்னதாக நேற்று, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்க விதிக்கப்படும் செஸ் வரி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வரை தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனிடையே வரி வருவாய் குறைந்ததால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் கால வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன . இது தொடர்பாக அடுத்து வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடுமையான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாநிலங்கள், குறிப்பாக எதிர் கட்சி ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்திய அரசு உறுதியான பதில் எதையும் தரவில்லை. செஸ் மூலம் கிடைக்கும் வருவாய், இழப்பீடாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
2017 ஜூலை 1ம் தேதி, முதல் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அளிக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன்படி 2022 ஜூலை மாதம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மே 31, 2022 வரை மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை முழுவதையும் மத்திய அரசு செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR