ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியச் செய்தி - ஜூன் 30 கடைசி தேதி

ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அரசின் சலுகைகளை நீங்கள் இழக்க நேரிடும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2022, 10:14 AM IST
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை
  • ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும்
  • ஜூன் 30 ஆம் தேதி கடைசி என மத்திய அரசு அறிவிப்பு
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியச் செய்தி - ஜூன் 30 கடைசி தேதி  title=

ரேஷன் கார்டு என்பது ரேஷன் எடுப்பதற்கு மட்டுமல்ல, அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கியில் இருந்து ஒவ்வொரு அரசு இடத்திற்கும் ரேஷன் கார்டை அடையாளமாகப் பயன்படுத்தலாம். இது தவிர, PM Awas Yojana, PM Garib Kalyan Anna Yojana மற்றும் பிற திட்டங்கள் போன்ற ஏதேனும் ஒரு அரசாங்கத் திட்டத்தில் பயன்பெற உங்களுக்கு ரேஷன் கார்டு தேவைப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பலன் வழங்கப்பட்டது. அப்போது, பல போலி ரேஷன் கார்டுதாரர்களும் அரசின் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த மோசடியை தடுக்க, ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 என கெடு கொடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அதனை நீட்டித்த மத்திய அரசு, ஜூன் 30, 2022 கடைசி தேதியாக அறிவித்துள்ளது. இந்தத் தேதிக்கு முன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ஆதாரை இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க | PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி? எளிய வழிகள்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியும். இதன் மூலம், நாடு முழுவதும் எங்கிருந்தாலும் மக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை அனைவரும் ரேஷன் கார்டுன் ஆதார் அட்டையை இணைக்கும்பட்சத்தில் போலி ரேஷன் அட்டைகளை முடிவுக்கு கொண்டு வரலாம். தகுதியற்றவர்கள் அரசின் ரேஷன் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது.

நீங்கள் இதுவரை ரேஷனுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் சேர்க்கவும். இல்லையெனில் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச ரேஷன் மற்றும் குறைந்த விலையில் ரேஷன், PM ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட பிற அரசாங்கத் திட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும். உடனடியாக இணைக்க விரும்பினால், நீங்கள் வீட்டிலிருந்தபடியே ரேஷனுடன் ஆதாரை இணைக்க முடியும். 

ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி? 

* முதலில் நீங்கள் UIDAI இணையதளமான uidai.gov.in க்குச் செல்லவும்.
* இப்போது 'ஸ்டார்ட் நவ்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பெயர் உட்பட உங்கள் முகவரியை நிரப்பவும்.
* பின்னர் "ரேஷன் கார்டு நன்மை" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
* அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, திரையில் செயல்முறை நிறைவு செய்தியைப் பெறுவீர்கள்.
* இப்போது உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு அது உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.

ஆஃப்லைனில் இணைப்பது எப்படி?

ரேஷன் கார்டை ஆதார் ஆஃப்லைனுடன் இணைக்க, தேவையான ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் ரேஷன் கார்டுதாரரின் ஆதார் நகல், ரேஷன் கார்டின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அடங்கும். உங்கள் ஆதாரின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பு ரேஷன் கார்டு மையத்திலும் செய்யப்படலாம்.

மேலும் படிக்க | பணியாளர் ஓய்வூதியத் திட்ட உச்சவரம்பை நீக்க வலுக்கும் கோரிக்கை: நிதர்சனம் என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News