பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை 18 முதல், அன்றாடம் வாங்கும் சில பொருட்களுக்கு இனி அதிக விலை செலுத்த வேண்டியிருக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்திற்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் தகவலைத் தெரிவித்தார். சில புதிய தயாரிப்புகள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி ஜூலை 18 முதல் அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். அதே சமயம் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதியமைச்சர் அளித்த தகவல் 


பிரண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், லஸ்ஸி, மோர், பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் மற்றும் வெல்லம் போன்ற வேளாண் பொருட்களின் ஜூலை 18 முதல் விலை உயரும். ஏனெனில் அவற்றின் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதே சமயம் பேக் செய்யப்படாத மற்றும் பிராண்டட் இல்லாத பொருட்களுக்கு வரி இல்லை. 


மேலும் படிக்க: புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி


விலை அதிகரிக்க உள்ள சில பொருட்கள்


டெட்ரா பேக் தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் விலை அதிகரிக்கும். ஏனெனில் இது ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதற்கு முன்பு வரி விதிக்கப்படவில்லை.


காசோலை புத்தகம் வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இனி 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.


மருத்துவமனையில் ரூ.5,000க்கு மேல் (ஐசியு அல்லாத) அறைகளுக்கான வாடகையில் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.


இது தவிர, வரைபடங்கள் மற்றும் அட்லஸ் உள்ளிட்டவைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.


நாள் ஒன்றுக்கு ரூ.1,000க்கு குறைவாக வாடகைக்கு உள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். முன்பு இதற்கு வரி விதிக்கப்படவில்லை.


LED விளக்குகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். முன்பு இதற்கு வரி விதிக்கப்படவில்லை.


பிளேடுகள், காகிதத்தை வெட்டும் கத்தரிக்கோல், பென்சில் ஷார்பனர்கள், ஸ்பூன்கள், ஃபோர்க் ஸ்பூன்கள், ஸ்கிம்மர்கள் மற்றும் கேக் - சர்வர்கள் போன்றவற்றுக்கு முன்பு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.


விலை குறையும் சில பொருட்கள்


ஜூலை 18 முதல், ரோப்வே மூலம் பயணிகளை ஏற்றி செல்லுதல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டணம் குறையும். ஏனெனில் இதற்கு 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


எலும்பு முறிவு சாதனங்கள், உடல் செயற்கை உறுப்புகள், கண்னிற்கான லென்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்புப் படைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு IGST பொருந்தாது.


மேலும் படிக்க: டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி..! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR