குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி - பாஜக இடையே வெடிக்கும் மோதல்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறி பரப்பி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர்பால் சிங் பாகா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மெல்ல மெல்ல தேசிய கட்சியாக தலைதூக்கத்தொடங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் தலைமையின் மேல் அதிருப்தியில் இருக்கும் பல்வேறு மாநில கட்சிகளும், வாக்காளர்களும் மூன்றாவதாக மாற்று கட்சி ஒன்று வேண்டும் என்ற நிலைபாட்டை எட்டி வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை உறுதி செய்தது. அக்கட்சி 92 இடங்களில் வென்று அரசியல் ரீதியான கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்தான் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியை பார்த்து பாஜக பயப்படுவதாகவும், குஜராத் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அந்த கட்சி திட்டமிட்டு வருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இடையே அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஆம் ஆத்மி கட்சியையும் இழிவு படுத்தும் விதமாக பாஜக யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயலாளர் தஜிந்தர்பால் சிங் பாகா தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். அது மட்டுமின்றி, மார்ச் மாதம் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய தஜிந்தர் பக்கா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த சன்னி சிங் அளித்த புகாரின் பேரில் பஞ்சாப் போலீஸார் நேற்று டெல்லியில் தஜிந்தரை அவரது வீட்டில் கைது செய்து அழைத்து சென்றனர். மத விரோதத்தை ஊக்குவித்தல், கொலை மிரட்டல் ஆகிய குற்றசாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தஜிந்தரை டெல்லியில் இருந்து மொஹாலிக்கு போலீஸார் காரில் அழைத்து சென்றனர். இதனிடையே தஜிந்தர் தந்தை டெல்லி போலீஸில் புகார் செய்தார். அதில் தனது மகனை பஞ்சாப் போலீஸார் கடத்தி சென்றதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தஜிந்தரை பஞ்சாப் போலீஸார் மொஹாலிக்கு அழைத்து செல்லும் வழியில் ஹரியாணா மாநில போலீஸார் அவர்களை தடுத்தனர். தஜிந்தர் கடத்தப்பட்டதாக டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக ஹரியாணா போலீஸார் பஞ்சாப் போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது டெல்லி போலீஸாரும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு 3 மாநில போலீஸாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் டெல்லி, பஞ்சாப், ஹரியாணாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், ஹரியாணாவின் குரு ஷேத்ரா பகுதியில் டெல்லி போலீஸாரிடம், தஜிந்தர் பக்கா ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | ஊடகங்களை பார்த்து பயந்தாரா மோடி?? உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR