குஜராத் 2-வது கட்ட தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு பிறகு சீல்!
குஜராத் 2-வது கட்ட தேர்தலின் மின்னணு இயந்திரங்களின் வாக்களிப்பு முடிவுக்கு பிறகு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று நடக்க இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் வாக்காளித்தனர்.
இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பிரதமர் மோடி மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிடோர் வாக்களித்தனர். மாலை வரை அமைதியாக வாக்கு பதிவு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாக்கு பதிவு நிறைவுற்ற நிலையில் மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.