நாடுமுழுவதும் அணைவரது கவணத்தையும் ஈர்த்துள்ள இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணியளவில் துவங்கவுள்ளது, எனவே சுமார் 11 மணியளவில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் யார் என்பது குறித்து ஏறக்குறைய தெரிந்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்: 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெற்றது. பின்னர் வாக்குபதிவு நடைப்பெற்ற 6 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு டிசம்பர் 17 அன்று நடைப்பெற்றது. ஆக இந்த தேர்தலில் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவானது.


பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் பல யுக்திகளை கையாண்டு வாக்குகளை சேகரித்தன. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக-வும், மதவாதம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகளை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியும் பரப்புரை செய்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 52 கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,828 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.


இமாச்சலப் பிரதேசம்: 68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் நாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 


இமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் தலைமையில் பாஜக அணியும் கடுமையாக மோதின. இரு கடசியினரும் கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.


மொத்தம் 338 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவாகின.