கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 36 பேரை விடுதலை செய்து, 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்த தீர்ப்பு குறித்து மறைந்த எம்.பி. ஈசன் ஜாப்ரி மனைவி ஜாகியா பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது: தீர்ப்பில் எனக்கு முழுதிருப்தி கிடைக்கவில்லை. நான் எனது போராட்டத்தை தொடருவேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வேன் என்றார்.