ஹெச்1பி விசா விதிமுறைகள் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி முறையீடு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெச்1பி விசா விதிமுறைகளை, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். 


இதன் ஒருபகுதியாக, ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி, அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்திலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதனால், இந்தியா உள்பட அமெரிக்காவில் அலுவலகங்கள் வைத்துள்ள பல நாடுகளும் சிக்கலை சந்தித்துள்ளன. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஐ.டி, நிறுவனங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தகப் பணிகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இந்திய ஐடி, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பெருமளவு வர்த்தகம் அமெரிக்க சந்தையை மையப்படுத்தியே இருப்பதால், அவற்றுக்குச் சலுகை காட்டினால் இருதரப்பு வர்த்தக உறவு மேம்பட வாய்ப்புள்ளதாகவும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுபற்றி தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.