‘மெஹ்ரம்’ இல்லாமல் பெண்கள் ஹஜ் மேற்கொண்டதற்கு காரணமான சவுதி அரேபியாவுக்கு நன்றி
PM On Haj Pilgrimage: `மெஹ்ரம்` இல்லாமல் நான்காயிரத்திற்கும் அதிகமான இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறித்து பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார்
புதுடெல்லி: இந்த ஆண்டு 4,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்கள் ‘மெஹ்ரம்’ இல்லாமல் ஹஜ் செய்தது மிகப்பெரிய மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக ஹஜ் கொள்கையில் இந்திய அரசு மேற்கொண்ட மாற்றங்களால் இந்த ஆண்டு 4,000 க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் 'மெஹ்ரம்' இல்லாமல் ஹஜ் செய்தனர்.
இது 2018 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பிறகு மிக அதிக அளவிலான பெண்கள் புனித யாத்திரையில் பங்கு கொள்ள வைத்துள்ளதை காட்டுகிறது. 'மெஹ்ரம்' இல்லாமல் 4,000 இந்தியப் பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். “அவர்களின் இந்த பயணம் பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என்றார்.
மிகப்பெரிய மாற்றம்
இன்று, தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பில் பேசிய பிரதமர் மோடி, சமீபத்தில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பிய முஸ்லீம் பெண்களிடமிருந்து தனக்கு அதிக எண்ணிக்கையிலான கடிதங்கள் வந்துள்ளதாக கூறினார்.
"அவர்களின் இந்த பயணம் பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எந்த ஆண் துணையோ அல்லது மெஹ்ரமோ இல்லாமல் ஹஜ் செய்த பெண்கள் இவர்கள் தான், எண்ணிக்கை 50 அல்லது 100 அல்ல, ஆனால் 4,000 க்கும் அதிகமானவர்கள் - இது ஒரு பெரிய மாற்றம்" என்று பிரதமர் கூறினார்.
மெஹ்ரம்
ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாது. இது மெஹ்ரம் என்று அறியபப்டுகிறது. இதற்கு முன்னதாக, முஸ்லீம் பெண்கள் 'மெஹ்ரம்' இல்லாமல் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், மன் கி பாத் மூலம் சவூதி அரேபியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க | 3 ஆண்டுகளில் பாமக தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது - அன்புமணி ராமதாஸ்!
'மெஹ்ரம்' இல்லாமல் ஹஜ் செல்லும் பெண்களுக்காக பிரத்யேகமாக பெண் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், கடந்த சில ஆண்டுகளில் ஹஜ் கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை என்று பிரதமர் கூறினார்.
2023ல் இந்தியாவிலிருந்து 4,314 பெண்கள் மெஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்தனர் என டெல்லி ஹஜ் கமிட்டி தலைவர் உறுதி செய்தார். பெண் யாத்ரீகருடன் செல்ல மஹ்ரம் தேவையில்லை என்று சவுதி அரசு அறிவித்ததை அடுத்து, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்.
"எங்கள் இஸ்லாமிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இது பற்றி எனக்கு நிறைய எழுதியுள்ளனர். இப்போது அதிகமானோர் 'ஹஜ்' செல்ல வாய்ப்பு பெறுகிறார்கள். ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பிய மக்கள், குறிப்பாக எங்கள் தாய்மார்கள் வழங்கிய ஆசீர்வாதம். சகோதரிகள் தங்கள் கடிதங்கள் மூலம் மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது” என்று மோடி கூறினார்.
முஸ்லீம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவது உட்பட பாஜகவின் கூற்றுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
இந்த ஆண்டு இந்தியாவிற்கு 1,75,025 ஹஜ் யாத்ரீகர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வருடாந்திர யாத்திரை ஜூன் இறுதியில் நடைபெற்றது.
மேலும் படிக்க | Worlds biggest cemetery: அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்! உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ