ஹஜ் பயணம் செல்லுபவர்களுக்கு நற்செய்தி! சவூதி அரசின் முக்கிய அறிவிப்பு!

சவுதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் தளத்தை தொடங்க உள்ளது. இதன் மூலம் ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் பயனடைவார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 7, 2023, 06:50 PM IST
  • ஹஜ் 2023 க்கான பதிவு தொடங்குகிறது.
  • கொரோனா பாதிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
  • சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் தளத்தை தொடங்க உள்ளது.
ஹஜ் பயணம் செல்லுபவர்களுக்கு நற்செய்தி! சவூதி அரசின் முக்கிய அறிவிப்பு! title=

ஹஜ் இஸ்லாமிய மதத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான இஸ்லாமியர்கள், ஹஜ் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியா செல்கின்றனர். இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் சவூதி அரேபியாவை அடைகின்றனர். கொரோனா பாதிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு வசதி அளிக்கும் வகையில், சவுதி அரசு ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப் போகிறது. அவரது இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பயனடைவார்கள். சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் தளத்தை தொடங்க உள்ளது.

சவூதியின் இந்த நடவடிக்கை, ஹஜ் யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும். இந்த ஆன்லைன் வசதியின் மூலம், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து செல்பவர்கள், சவூதி அரசின் போர்ட்டலில் நேரடியாக ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியும். ஹஜ் பயணத்திற்கான பதிவு சேவை 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இருப்பினும், தற்போது சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும்  படிக்க | சீனாவில் 'புதிய கட்டத்தில் நுழையும்' கோவிட்-19 பற்றி ஜி ஜின்பிங் கமெண்ட்

ஹஜ் 2023 க்கான பதிவு தொடங்குகிறது

இதைச் செய்ய, சவுதி ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் localhaj.haj.gov.sa. தற்போது, சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் மட்டுமே தற்போது ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களின் பெயர்கள் ஆன்லைன் லாட்டரியில் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். லாட்டரியில் தேர்தெடுக்கப்படும், யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

சவூதி அரேபிய அரசாங்கம் கடந்த சில மாதங்களில் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான நடவடிக்கைகளின் செயல்பாட்டில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இதில் பெண்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு மிகப்பெரியது. புதிய சவூதி விதிகளின்படி, இப்போது பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் செல்லலாம். முன்பு அத்தகைய விதி இல்லை. ஹஜ்ஜுக்குச் செல்ல, பெண் ஏதேனும் ஒரு துணையுடன் செல்ல வேண்டியது அவசியம். பெரும்பாலும் பெண்கள் ஹஜ்ஜுக்கு கணவன், மகன் அல்லது சகோதரனுடன் செல்வார்கள்.

இது தவிர விசா விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. சவூதி அரேபிய அரசாங்கம் தற்போது மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான உம்ரா விசா வரம்பை 90 நாட்களாக உயர்த்தியுள்ளது. முன்பு இந்த வரம்பு 30 நாட்களாக இருந்தது. அதாவது, உம்ரா செய்ய சவுதி அரேபியா சென்றவர்கள், 30 நாட்கள் மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் 90 நாட்கள் இல்லாமல் தங்கலாம்.

மேலும் படிக்க | Watch: காணாமல் போன Jack Ma திரும்பி வந்தார்: Alibaba இணை நிறுவனருக்கு என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News