ராமர் கோவில் கும்பாபிஷேகம்... அரைநாள் விடுமுறை - மத்திய அமைச்சர் அறிவிப்பு
Half Day Leave On January 22: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Half Day Leave On January 22: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் வரும் ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். அதாவது, அன்று மதியம் 2.30 மணிக்கு மேல் அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் ஆன்மீக உணர்வுகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,"அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன. 22ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பணியாளர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள், ஜன.22 அன்று மதியம் 2.30 மணிநேரம் வரை அரை நாள் மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள் ஆகியவைக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு
தபால் தலை வெளியீடு
ராமர் கோவிலின் கருவறையில் உள்ள புதிய ராமர் கோவில் சிலையின் ‘பிரான் பிரதிஷ்டா’ விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார். முன்னதாக, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி இன்று காலையில் வெளியிட்டார்.
தபால் தலைகள் வெறும் காகிதம் அல்லது கலைப்படைப்பு அல்ல. அவை காவியங்கள் மற்றும் சிறந்த யோசனைகளின் ஒரு சிறிய வடிவம் என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். அவர் வெளியிட்ட ஆறு தபால் தலைகளில் ராமர் கோவில், கணேஷ், அனுமன், ஜடாயு, கேவத்ராஜ் மற்றும் மா ஷப்ரி ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய விடுமுறை
முன்னதாக, ஜன.22ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரி, வழக்கறிஞர் ஒருவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ