புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று. அவருக்கு இன்று 69 வயதை எட்டுகிறார். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தனது பிறந்த நாளை கழிக்க உள்ளார். குஜராத் செல்லும் பிரதமர் மோடி கெவாடியாவில் நடந்து வரும் அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்வார். பின்னர் காலை 9:30 மணிக்கு சர்தார் சரோவர் அணை பார்வையிட உள்ளார். இந்த அணையின் நீர் மட்டம் 138.68 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு, முழு அணையும் வெளிர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்று தாயை சந்தித்து ஆசிபெறுவது வழக்கம். அதன் பின்னர் குஜராத் மாநிலத்தின் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வார். மேலும் மோடி நாட்டின் பிரதமர் என்பதால் அவருக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.