2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஹர்திக் படேலுக்கு, குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் அடியாக விழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2015 ஆம் ஆண்டு குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு, விவசாயக்கடன் தள்ளுபடி, கல்வியில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து மாநிலத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். மேலும் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்தார். இவரின் இந்த போரடத்துக்கு பட்டேல் சமூகத்தினர் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர்.


ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பலருக்கு காயம் ஏற்ப்பட்டது. இந்த வன்முறைக்கு காரணமாணவர்கள் எனக் கூறி ஹர்திக் படேல் உட்பட 100-க்கு மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஹர்திக் படேல் உட்பட பேர் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஹர்திக் படேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.


அதன்பிறகு கடந்த மார்ச் 12 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் ஹிர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் மக்களவை தேர்தலில் ஜம்நாகர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஹிர்திக் படேல் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின.


ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஹிர்திக் படேல் மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற வந்த, இந்த வழக்கில் இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹிர்திக் படேலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மாற்றம் செய்ய முடியாது. மேலும் தீர்ப்புக் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 


தற்போது ஹர்திக் படேல் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டு உள்ளது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவதாக கூறப்படுகிறது.