சண்டிகர்: பாஜவின் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் (Manohar Lal Khattar) சண்டிகர் சென்றுள்ளார். சட்டமன்றக் கட்சியின் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்வார். இன்று நடைபெறும் கூட்டத்தில் ஹரியானாவின் பாஜக சட்டமன்றத் தலைவராக மனோகர் லால் கட்டர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பிறகு அவர் ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை முன்வைப்பார் எனக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளியன்று மதியம் 2 மணிக்கு அரியான மாநிலத்தின் முதல்வராக கட்டார் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளலாம் என்றும், அவருடன் துணை முதல்வராக ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து இன்னும் தெளிவாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரியான மாநிலத்தின் அமைச்சர்களின் பதவியேற்பு விழா பின்னர் நடைபெறலாம் எனத் தெரிகிறது.


முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை), 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹாரியான தேர்தலில் 10 இடங்களை வென்ற ஜனநாயக் ஜனதா (JJP) கட்சியுடன் பாஜக (BJP) கூட்டணி அமைத்தது. 


இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டணிக் குறித்து ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Aamit Shah) பேச்சுவாரத்தை நடத்தினர். அதன் பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, அரியான மாநிலத்தின் முதலமைச்சர் பாஜகவிலிருந்து வருவார் என்றும், துணை முதல்வர் கூட்டணி கட்சியான ஜேஜேபியைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் கூறினார்.