இந்து மதத்தை தாக்கிய இஸ்லாமிய மதகுரு கைது! மும்பை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்
Islamic Cleric Salman Azhari Arrested: மதவெறி உரையாற்றிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி கைது பின்னணி என்ன? குஜராத் ஏடிஎஸ் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை...
மத நிந்தனை பேச்சு: குஜராத்தில் இந்து மதத்தைத் தாக்கி பேசிய இஸ்லாமிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டார்; குஜராத் ATS காவல்துறையினர் மும்பையில் இருந்த சல்மான் அஸ்ஹாரியை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள். சல்மான் அஸ்ஹாரியின் ஆதரவாளர்கள் காட்கோபர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள்.
இஸ்லாமிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி வெறுப்பு பேச்சு
இஸ்லாமிய மதகுரு மௌலானா முப்தி சல்மான் அஸ்ஹாரி, வெறுப்பு பேச்சு வழக்கில் மும்பையின் காட்கோபர் பகுதியில் இருந்து குஜராத் ATS ஆல் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ஜூனாகத்தில் அவர் பேசியபோது, மத நிந்தனை செய்யும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதற்காக அஸ்ஹாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, அதை அடுத்து புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மும்பையில் இருந்த மதகுருவை கைது செய்தனர். இந்தக் கைது இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது.
சர்ச்சை பேச்சு வீடியோ வைரலானதை அடுத்து, தற்போது, இஸ்லாமிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி கைது மற்றும் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் அவரது ஆதரவளர்கள், காவல் நிலையத்திற்கு வெளியே நடத்தும் போராட்டங்கள் தொடர்பான வீடியோக்களும் எக்ஸ் வலைதளத்தில் வைரலாகின்றன.
கும்பலைக் கட்டுப்படுத்த காவல் நிலையத்திற்கு வெளியே விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | Paytm பயன்படுத்தும் வணிகர்கள் பிற செயலிக்கு மாற வேண்டும்: வர்த்த கூட்டமைப்பு
புகார் பதிவு செய்யப்பட்டிருந்ததை அடுத்து, குஜராத் மாநிலம் ஜுனாகத் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷத் மேத்தா, அஸ்ஹாரியைத் தேடி வருவதாகக் கூறியிருந்தார். புதன்கிழமை இரவு ஜூனாகத்தில் உள்ள 'பி' பிரிவு காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இஸ்லாமிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி பேசியபோது மதவிரோதத்தை வளர்க்கும் வகையில் பேசியதாக கூறப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC)
இந்த வீடியோ பரவலாகப் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் அமைப்பாளர்களான முகமது யூசுப் மாலேக் மற்றும் அசிம் ஹபீப் ஒடெடரா ஆகியோர் மீதும், அஸ்ஹரி மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 153பி (வெவ்வேறு மதக் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 505 (2) (பொதுக் குழப்பங்களுக்கு ஏதுவான அறிக்கைகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மாலேக் மற்றும் ஹபீப் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மதம் குறித்து பேசுவார் என்றும் போதைக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வை பரப்புவார் என்றும் கூறி, அஸ்ஹாரி பேசும் கூட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அயோத்தி ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்ட அனுமதில் கிடைத்து, தற்போது கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்தபிறகு, மதவிரோத பேச்சு மற்றும் அது தொடர்பான கைது முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியாகும் என்ற நிலையில், இஸ்லாமிய மதகுருவின் வெறுப்பு பேச்சு மற்றும் அவரது கைது முக்கியத்துவம் பெறுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ