Paytm பயன்படுத்தும் வணிகர்கள் பிற செயலிக்கு மாற வேண்டும்: வர்த்த கூட்டமைப்பு

Paytm வங்கி மீது ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், பேடிஎம் பயனர்கள் பலர் குழப்பத்திலும் பதற்றத்திலும் உள்ளனர். குறிப்பாக வணிகர்கள் மத்தியில் இந்த கவலை அதிகம் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 4, 2024, 06:28 PM IST
Paytm பயன்படுத்தும் வணிகர்கள் பிற செயலிக்கு மாற வேண்டும்: வர்த்த கூட்டமைப்பு title=

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் Paytm, தனிப்பட்ட அடையாளத்தை சரிபார்க்கும் KYC விதிமுறைகளையும் பின்பற்றாமல் கோடிக்கணக்கான கணக்குகளை திறந்தது கண்டுபிடிக்கப்பட்டதை எடுத்து மத்திய ரிசர்வ் வங்கி, நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு தடை விதித்தது. இதையடுத்து 2024 பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, பேடிஎம் பேமெண்ட் லிமிடெட் வங்கியில் எந்தவித நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. அதாவது பேடிஎம் கணக்குகளில் பணத்தை செலுத்தவோ, பணத்தை வரவு வைக்கவும் பரிவர்த்தனை செய்வதும் முடியாது.

Paytm வங்கி மீது ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், பேடிஎம் பயனர்கள் பலர் குழப்பத்திலும் பதற்றத்திலும் உள்ளனர். குறிப்பாக வணிகர்கள் மத்தியில் இந்த கவலை அதிகம் உள்ளது. இந்நிலையில் பேடிஎம் இருக்கு பதிலாக  பிற செயலிகளை பயன்படுத்துமாறு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (The Confederation of All India Traders -CAIT)  அறிவுறுத்தி உள்ளது.

பேடிஎம் பயனர்கள், பேடிஎம் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறவும், நிவர்த்தனைகளை இழப்பின்றி நடத்தவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, நாடு முழுவதிலும் உள்ள பேடிஎம் பயன்படுத்தும் வணிகர்களுக்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பிசி பார்த்தியா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் ஸ்ரீ பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், சிறு வணிகர்கள் விற்பனையாளர்கள் என பலர் பேடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்கிறார்கள். இதனால் paytm பேமெண்ட்ஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேடிஎம் இல் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள், அடையாள சரிபார்ப்பின்றி நடந்துள்ளதால் பண மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு நிதியை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டால் அது குறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்!

வர்த்தக பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும், நிதி இழப்பையும் தடுக்க அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் பேடிஎம் பயனர்களை யுபிஐ மூலம் நேரடியாக பரிவர்த்தனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது தவிர பிற வங்கிகளின் கட்டண செயல்களையும் பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வணிகர்களின் நிதி நலன்களை பாதுகாக்க, இவ்வாறு அறிவுறுத்துவதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் மேலும் தெரிவித்தனர். நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நீரும் நிறுவனம் அனைத்தையும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News