ஈஷாவின் காவிரி காவேரி கூக்குரல் இயக்கத்தின் (Cauvery Calling) காடு வளர்ப்பு நடவடிக்கையை உயர் நீதிமன்றம் பாராட்டுகிறது, இதுதொடர்பாக தாக்கல் செய்த மனு, "அற்பமானது" என்று சொல்லி தள்ளுபடி செய்தது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈஷா அவுட்ரீச்-இன் (Isha Outreach) திட்டமான காவிரி அழைக்கிறது என்ற பொருள்படும் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இவ்வாறு கூறியது: ”தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காடு வளர்ப்பு மிகவும் அவசியமாகிவிட்டது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும்”. 


ஈஷா அவுட்ரீச் என்பது ஈஷா அறக்கட்டளையின் சமூகப் பிரிவாகும், இது சத்குரு ஜிக்கி வாசுதேவ் அவர்களால் நிறுவப்பட்டது. இதுபோன்ற முயற்சிகளை பாராட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


"தரிசு நிலத்தில் மரங்களை நடவு செய்வது குற்றம் அல்ல, மூலம் அரசு நிலத்தில் ஒரு மரம் கூட நடவில்லை" என்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.மகடம் ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு கூறியது.


Also Read | ஈஷா சார்பில் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு இயற்கை விவசாய சுற்றுலா


பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு (Public Interest Litigation) ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஈஷா அவுட்ரீச், மரம் வளர்ப்புக்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கிறது என்றும், மரம் ஒன்றுக்கு 42 ரூபாய் வாங்குவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 


253 கோடி மரங்களின் என்ற இலக்கின்படி, 10,626 கோடி ரூபாயை ஈஷா சேகரிக்கும் என்றும், அது தவறு என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு நிலத்தில் காடு வளர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறிய மனுதாரர், இஷா அறக்கட்டளை பொது நிதி சேகரிப்பதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.


காவிரி கூக்குரல் இயக்கம் என்பது ஒரு தன்னார்வத் திட்டம், அது அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெறவில்லை என்றும் அது அரசு அல்லது பொது நிலங்களைப் பயன்படுத்துவதில்லை என்றும் ஈஷா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் விவசாயிகளுக்கு கல்வியும் ஊக்கமும் அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தானாக முன்வந்து மரங்களை நடுவதற்கு உதவுவதாக ஈஷா அவுட்ரீச் தரப்பில் கூறப்பட்டது.  


ALSO READ | #FreeTemples: உத்திராகண்டைபோல் தமிழக அரசும் கோவில்களை விடுவிக்க சத்குரு கோரிக்கை


அரசு நிலத்தில் மரங்களை வளர்ப்பது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்த நீதிமன்ற அமர்வு, ஒரு தனிநபர் அல்லது இந்திய குடிமகன் அரசு நிலத்தில் மரம் நடுவதைத் தடுக்கும் எந்த சட்டரீதியான சட்ட ஏற்பாடுகளும் தனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்று குறிப்பிட்டது.


"தரிசு நிலத்தில் மரங்களை வளர்ப்பது குற்றம் அல்ல, அரசு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்வது தடைசெய்யப்பட்டதாகக் கருதினால், அது எந்தவித உள்நோக்கமும் இன்றி அரசு நிலங்களில் பெரும் எண்ணிக்கையிலான மரங்கள் உருவாவதை நிறுத்திவிடும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இதுபோன்ற அற்பமான வழக்குகளை தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு அபராதம் விதித்தது.  


Also Read | ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு காக்னிஸன்ட் ஊழியர்கள் வழங்கிய ஆன்லைன் வகுப்பு பயிற்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR