#FreeTemples: உத்திராகண்டைபோல் தமிழக அரசும் கோவில்களை விடுவிக்க சத்குரு கோரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2021, 10:07 PM IST
  • கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது.
  • தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.
  • உத்தரகாண்ட் அரசுக்கும், அம்மாநில மக்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
#FreeTemples: உத்திராகண்டைபோல் தமிழக அரசும் கோவில்களை விடுவிக்க சத்குரு கோரிக்கை title=

உத்தரகாண்ட் மாநில அரசு 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த கோவில்கள் மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய படி.

கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை உத்தரகண்ட் அரசு உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்த மகத்தான முடிவை எடுத்த மதிப்பிற்குரிய முதல்வர் திரு.தீரத் சிங் ராவத் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என ட்விட்டரில் அவர் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கையை மற்ற மாநில முதல்வர்களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பிற மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிப்பது உத்தரகாண்ட் போல் எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விருப்பம் இருந்தால் எத்தகைய சிக்கலுக்கும் நம்மால் தீர்வு காண முடியும். தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன். 

இந்த தருணத்தில் உத்தரகாண்ட் அரசுக்கும், அம்மாநில மக்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என சத்குரு கூறியுள்ளார்.

மேலும், வீடியோவுடன் சேர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவில்களை விடுவிக்கும் இயக்கத்தை ஆதரித்ததற்கு, திரு. தீரத் சிங் ராவத் அவர்களுக்கும், உத்தரகண்ட் அரசு, ஊடகங்கள், 3 கோடிக்கு மேலான மக்கள், ஆன்மீக & மதத் தலைவர்கள் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்திக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | FreeTNTemples: அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்களை விடுவிக்க மூன்று கோடி பேர் விருப்பம் - Isha
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News